மேலும் அறிய

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலில் கடக்கும் மழை நீர்

’’மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்’’

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியிருக்கும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

                               தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலில் கடக்கும் மழை நீர்
 
இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு இருக்கிறது. இந்த நீர், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டிச் செல்கிறது.மருதூர் அணைக்கு உட்பட்டமருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு உட்பட்ட வடகால், தென்கால் ஆகிய வாய்க்கால்களையும் திறந்துவிடவில்லை. இவ்வாறு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் வரும்போது வாய்க்காலைத் திறந்துவிட்டால் மடைகள் உடையும் அபாயம் இருப்பதால் திறக்கப்படவில்லை.

                               தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலில் கடக்கும் மழை நீர்
 
இந்த நிலையில், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றுப் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர் அதிகமாக திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த வெள்ள நீர், புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படுகிறது.மேலும் ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

                                தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலில் கடக்கும் மழை நீர்
 
ஆண்டுதோறும் பருவமழையின் போதும், அதிகப்படியான வெள்ளத்தின் போதும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் பாசனக் குளங்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு சேமிக்கும் பட்சத்தில் இப்பகுதியில் முப்போகம் விளைச்சல் இருக்கும்  என்கின்றனர் விவசாயிகள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை நிலவரப்படி திருச்செந்தூரில் 48 மி.மீ, தூத்துக்குடியில் 23 மி.மீட்டர் மழையும் காயல்பட்டிணத்தில் அதிகப்பட்சமாக 90 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாழை , நெல் விவசாயப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. விளை நிலங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget