மேலும் அறிய

பாபநாசம்: மீண்டும் மீண்டும் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!

பாபநாசம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு, வி.கே.புரம், கோட்டைவிளைபட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் குட்டியுடனும், தனியாகவும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரவில் சுற்றித் திரிகின்றன

இரவில் கோவிலில் உலா வரும் கரடி:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, ஆடு,நாய் போன்றவற்றை கடித்து வருகின்றது. அதன்படி பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர்புரம், அனவன்குடியிருப்பு, வி.கே.புரம், சிவந்திபுரம், கோட்டைவிளைபட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் குட்டிகளுடனும், தனியாகவும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  அடி‌க்கடி சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில்  நேற்று இரவு கோட்டைவிளை பட்டியில் உள்ள சுடலைமாடன் கோவில் வளாகத்தில் இரவு ஆள் நடமாட்டம் உள்ள நேரத்தில் ஒற்றை கரடி ஒன்று  சுற்றித்திரிந்தது. இதனை அப்பகுதியினர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதனால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தையை தொடர்ந்து கரடி அச்சம்:  

குறிப்பாக அனவன்குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அங்குள்ள பாறைகளுக்கு அருகில் கோயிலில் கரடி உலா வந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஏற்கனவே அப்பகுதியில் இரண்டு சிறுத்தைகள் அடுத்தடுத்து கூண்டில் சிக்கிய நிலையில் மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அம்மக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில்  கரடி நடமாட்டம் மேலும் அவர்களை அச்சமடைய செய்தது. 

சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும் கரடிகள்:

அதன்பின்னர் அனவன்குடியிருப்பிற்கு அருகிலேயே இருக்கும் டாணா பகுதியில் கடந்த கடந்த வாரம்  காளிபார்விளை தெருவில் இரவில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் கரடி அப்பகுதியில் செல்லும் போது அங்கு தெருக்களில் இருந்த மக்கள் கரடியை பார்த்து கரடி கரடி என்று கூறி உள்ளே செல்வதும், ஒரு  நபர் வீட்டிற்குள் இருந்தே சத்தமிட்டு அதனை விரட்டுவதும் அந்த காட்சியில் பதிவாகியது..  இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே மிகுந்த பயமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கிராமங்களில் கரடிகள் தெருக்களில் நாய்கள் செல்வது போது சர்வ சாதாரணமாக செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன் வனத்துறையினர் கரடி நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட வேண்டுமென சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் செய்தியாக வெளியிட்ட  நிலையில் வனத்துறையினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் கரடி:

குறிப்பாக கரடிகளை பிடிக்க வனத்துறையினர் அனவன் குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதிகளில் கூண்டு வைத்து அதனை கண்காணித்து வருகின்றனர். ஆனால் கூண்டில் சிக்காமல் கரடி போக்கு காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் கரடியை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.  தொடர்ந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Embed widget