மேலும் அறிய

Crime: நடுரோட்டில் வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை.. நெல்லையில் அரங்கேறிய கொடூரம்..! நடந்தது என்ன?

நெல்லையில் வார்டு கவுன்சிலரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த  நாராயணசாமியின் மூத்த மகன் ராஜாமணி (32). பட்டதாரியான இவரது மனைவி சண்முகவடிவு. இவருகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன  நிலையில் ராஜாமணி தற்போது கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அப்பகுதியில் பலசரக்கு கடையும் வைத்து நடத்தி வருகிறார்.

வெட்டிக்கொலை:

அதோடு் வீட்டில் உள்ள கால்நடைகளை அப்பகுதியில் இருக்கும் பாலம் அருகே மேய்ச்சலுக்கு விட்டு மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாலை மேச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதற்காக அப்பகுதி பாலத்தில்  நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜாமணியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், ராஜாமணியின் உறவினர்களும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். இதனை தொடர்ந்து நெல்லை தாலுகா போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உறவினர்கள் போராட்டம்:

நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Crime: நடுரோட்டில் வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை.. நெல்லையில் அரங்கேறிய கொடூரம்..! நடந்தது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

தொடர் கொலை சம்பவங்கள்:

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் தேடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரண நடத்தி வரும் நிலையில் ராஜாமணி எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனு காரணமா என விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும்  11 படங்கள்
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் 11 படங்கள்
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
Rohit Sharma: 12 ரன்னில் பறிபோன 11 ஆயிரம் ரன்! அவரைப் பின்னுக்குத் தள்ளிருக்கலாமே ரோகித் சர்மா?
Rohit Sharma: 12 ரன்னில் பறிபோன 11 ஆயிரம் ரன்! அவரைப் பின்னுக்குத் தள்ளிருக்கலாமே ரோகித் சர்மா?
Embed widget