மேலும் அறிய

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், தடுப்பூசி கால்நடை மருத்துவ கல்லூரியிலிருந்து ஆலோசனை வழங்குதல் போன்றவை செய்யப்படும்.

தமிழகத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி அருகேயுள்ள மேலத்தட்டப்பாறை கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா முன்னிலை வகித்தார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடைகளுக்கு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளின் இன்னல்களை போக்குவதற்காகவும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விளக்கங்களையும் செயலாக்கங்களையும், மருத்துவ சேவைகளையும் விவசாயிகளின் இருப்பிடங்களிலேயே வழங்கும் விதமாகவும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் 7760 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 240 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஒரு முகாம் நடத்த ரூ.10 ஆயிரம் வீதம் 240 முகாம்களுக்கும் ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் 2023 பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி, கோழி கழிச்சல் தடுப்பூசி, தீவன பயிர் மற்றும் தீவனப்புல் சாகுபடி விளக்கம், சிறு அறுவை சிகிச்சை, சிறு கண்காட்சி, கால்நடை மருத்துவ கல்லூரியிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குல் போன்றவை செய்யப்படும். தொலைதூர குக்கிராமங்களில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மருந்தகம் செல்வதற்கு வசதி வாய்ப்பற்று இருப்பதால் அவர்களுக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன்,  உதவி இயக்குநர் ஜோசப் ராஜ், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொ)எட்வின், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தூத்துக்குடி ஒன்றிய பெருந்தலைவர் வாசுகி அம்பாசங்கர், மேலத்தட்டப்பாறை ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget