மேலும் அறிய

டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

'டிசம்பர் 25 முதல் ஜன 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு'

நெல்லையில் கடந்த 17ஆம் தேதி டவுண் சாப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 மாணவர்கள் பலியானார்கள், மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாப்டர் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மேலும் விபத்து ஏற்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் இதனை தொடர்ந்து விபத்தில் பலியான நெல்லை பேட்டை அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சுதீஷ் பேட்டை அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் அன்பழகன் மற்றும் நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் விஸ்வ ரஞ்சன் ஆகியோர் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆபத்தாக காட்சி அளித்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்,


டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பள்ளிகளில் கடைபிடிக்கும் விதிமுறைகள், மோசமான நிலையில் இருக்கும் பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 


டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நெல்லை மாவட்டத்தில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவத்தை போன்று இனி நடந்திராத வண்ணம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  பள்ளிகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் அறிக்கை கொடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 168 பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது.கொரோனா பின் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது.

அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து மாதத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கை பள்ளி கல்வித்துறை மூலம் பெறப்பட்டு வருகிறது பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு கூடங்களில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டுபட்டு வருகிறது. மோசமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும் பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் பள்ளிகள் உடன் இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பள்ளி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணம். பள்ளி கல்வி துறை ஆணையர் தலைமையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு விரைவில் பணி நியமனம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றவர்களுக்கு தமிழக அரசின் நிதி நிலை சரியான பிறகு தேவைக்கேற்ப பணி நியமன ஆணை படிப்படியாக வழங்கப்படும். 

பள்ளிகளில் சிறுநீர் இடைவேளையின் போது மாணவ மாணவிகள் கூட்டமாக செல்லாமல் கால நேரம் மாற்றத்தை ஏற்படுத்தி, கூட்டத்தை பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் இந்த கோரிக்கையை திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நயினார் நாகேந்திரன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் வலியுறுத்தியுள்ளார்கள்.  இதற்கான நடவடிக்கையை விரைவில் எடுப்போம். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுப்பதற்காக அரசுப் பேருந்துகளில் கதவுகள் அமைக்க போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு ஒரு அண்ணனாக துறையின் அமைச்சராக தமிழக முதல்வரிடம் அவர்களின் கோரிக்கைகளை கொண்டு சேர்ப்பேன். 

ஒமிக்கிரான் பரவல் தற்போது பெரிய பாதிப்பில்லை. ஒமிக்ரான் பரவலால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் உடன் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகளில் எடுக்கபடும் நடவடிக்கை குறித்து முதல்வர் அறிவிப்பார்என்றார். பள்ளி கல்வித் துறை முதல்வரை போட்டியாக நினைத்துக் கொண்டு அவரை விட வேகமாக செயல்பட இலக்குடன் செயல்படுகிறோம். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.


டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

முன்னதாக  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசும் பொழுது, காலையில் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திலும், பின்    சிறுநீர் இடைவேளையின் போதும், மாலையில் பள்ளி முடியும் போதும் அதிக மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு சென்று வரும் சூழலால் நெருக்கடிகளும் இதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது, வருங்காலத்தில் இதனை தவிர்க்க மாணவர்கள் கூட்டத்தை பிரித்து அனுப்பும் வகையில் கால நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் அடிப்படை சுகாதாரத்தை பேணுவதற்காக ஆசிரியர்கள்,  மாணவர்களுக்கு ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் கழிவறை இன்னும் தூய்மையாக இருக்கும் என்றும் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் கடந்த 2010ஆம் ஆண்டு 400 மாணவ மாணவிகள் படித்த நிலையில் இன்று 4000 மாணவ-மாணவிகள் ஒரே பள்ளியில்  கல்வி கற்கின்றனர். இதற்காக நெல்லை டவுண் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் குறிப்பாக கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும் என பாஜக மாநிலத் துணைத் தலைவரும்,  திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.  தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நேரில் மனு வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget