மேலும் அறிய

நெல்லையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை; கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் அவமானப்படுத்தியதாக புகார்

சிறுவன் மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று இரவு தூங்க செல்லும் நேரம் மகன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை பார்த்த பெற்றோர் அவனை மீட்டனர், தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

அப்போது முதல்கட்ட விசாரணையில் சிறுவன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் நரேனை பள்ளி நிர்வாகம் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.  அதனால் சிறுவன் மன வேதனையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கேட்டு பள்ளி முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பெற்றோர் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சாலையில் இருந்து ஓரமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது, காவல்துறையினர் இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு சம்பவமாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது,

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Embed widget