மேலும் அறிய

நான் இதைத்தான் சொன்னேன்; உடனே அண்ணாமலைக்கு கோபம் வந்துவிட்டது - நீதியரசர் சந்துரு

பாஜக புதிய தலைவர் அண்ணாமலை வி டோண்ட் அக்சப்ட் தி ரிப்போர்ட். இது ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது என்றார், 21 ஆயிரம் புத்தகமாக இதையும் படிங்கள் என்றேன், உடனே கோபம் வந்துவிட்டது - நீதியரசர் சந்துரு

 நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாங்குநேரி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்து அரங்கம் நடைபெற்றது. இதில் நாங்குநேரி பள்ளி மாணவர்களிடையே நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள அமைத்த குழுவின் தலைவர் நீதி அரசர் சந்துரு சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய நீதியரசர் சந்துரு, நாங்குநேரி மாணவன் சின்னத்துரை சக மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிறப்பு மருத்துவ குழு அனுப்பி சிகிச்சை அளித்து மாணவன் மீண்டும் உலகில் நடமாட வைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி மாணவனின் குடும்பம் சிதைய கூடாது என சின்னத்துரை தாய்க்கு வீடு வழங்கி நெல்லையில் ஊர் மாற்றம் செய்து கொடுத்ததுடன் மாணவனின் படிப்புக்கு பேரு உதவி செய்த முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

நாங்குநேரி இனி எங்கும் எப்போது வேண்டாம், நாங்குநேரி என்பது  ஒரு குறியீடு. சாதி வேறுபாடுகள் இனி தளைக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை. இதை முதல்வரிடம் கொடுத்த போது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் 680 பக்கத்தில் 15வது அத்தியாயத்தில் இருக்கின்றன. இதில் 4 பக்கத்தில் உள்ள ஒரு பரிந்துரைகளை ஒரு கட்சி முதல்முறையாக அறிக்கை விட்டனர்.  எச் ராஜா இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்றார். அக்கட்சியின் புதிய தலைவர் வி டோண்ட் அக்சப்ட் தி ரிப்போர்ட் என்றார். இது ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது என்கிறார். எந்த பக்கத்தில் அப்படி எழுதியிருக்கிறது.  எந்த பக்கத்திலும் மதத்திற்கு எதிராக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு உண்மை தேவையில்லை. இவர் சுயலாபத்திற்காக, இவருடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் செய்கிறார் என்கின்றனர். 20 ஆயிரம் புத்தகம் படித்ததாக சொல்லும்  நீங்கள் இன்னொரு புத்தகமாக இந்த அறிக்கையையும் படிங்கள், அதன்பின் அறிக்கை விடுங்கள் என்றேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. உங்களிடம் நான் எந்த ஞானமும் பெற தேவையில்லை எங்களுக்கு தெரியும், எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.  உங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. தமிழக மக்கள் கற்றுக் கொடுப்பார்கள். 2024 தேர்தலில் கற்றுக் கொடுத்து விட்டார்கள்.  

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. ஒரு கட்சியை சேர்ந்த தேசிய குழுக்கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றினார்கள் அதில் நீதிபதி சந்துருவின் அறிக்கை நிராகரிப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். நாங்குநேரி சம்பவம் தொடர்பான அறிக்கையை நிராகரிப்பதற்கான எந்த காரணமும் பாஜக சொல்லவில்லை. சட்டமன்றத்தில் கூட பேசப்படாத அறிக்கையை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசி அறிக்கையை கிழித்தும் போட்டார்கள். பாஜகவிற்கு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இல்லை. பாஜக தவிர அனைத்து கட்சி தலைவர்களும் இந்த அறிக்கையை வரவேற்கிறார்கள். சிலருக்கு இந்த அறிக்கையில் கருத்து வேறுபாடு இருக்கலாம் கல்வி நிறுவனங்களில் ஜாதி பிரச்சனையை ஏன் தூண்டப்படுகிறது என்ற தகவலை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் எந்த பிரச்சனை நடந்தாலும் காவல்துறை செல்லக்கூடாது, அதனை தலைமை ஆசிரியர் பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்து கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் வன்முறை கலாச்சாரத்தில் மாணவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பிரச்சனையை பள்ளி வளாகத்திலேயே தலைமையாசிரியர் மூலம் தீர்த்துக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக உணர்ச்சி அதிக கவனத்துடன் பள்ளிகளில் நடக்கும் பிரச்சனையை பார்க்க வேண்டும். 

50 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களில் சாதிய பிரச்சனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 55000 கோடி பள்ளி கல்லூரிக்கு செலவு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் மீது சாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்கு கல்வி நிறுவனங்களில் பிரச்சனையை தீர்ப்பது அவசியம். ஜாதி ரீதியான பிரச்சனைகளை கல்வி நிறுவனங்களில் தீர்ப்பது சரியாக இருக்காது. மாணவர்களை அடித்து திருத்துவது தற்போது காலகட்டத்தில் முடியாத ஒன்று. மாற்று நடவடிக்கையை ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சூழல் தற்போது நடைமுறையிலேயே இல்லை. சாதிய பிரச்சனையை தடுக்க கல்வி நிறுவனங்களில் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, கல்வி நிறுவனங்களை தாண்டியும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மாணவர்களைப் போல ஆசிரியர்களுக்கும் புத்துணர்ச்சி வகுப்பு நடத்த வேண்டும். பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை உருவாக்கும் ஒரு முயற்சி. அது குறித்தும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் சமூக நீதி என்றால் என்ன என தெரியாத தலைமுறை தான் தற்போது உள்ளது. மாணவர்கள் வாழ்க்கைக்கு நல்ல நெறியை சொல்லிக் கொடுக்க வேண்டும். அறநெறி வேண்டுமென்று தான் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாமலை அறிக்கையை நிராகரிக்கிறோம் என சொல்கிறார். நாங்குநேரி அறிக்கையை படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியை மேற்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை சொல்லியுள்ளது. இதுவே பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மதமும் கைகளில் கயிறு கட்ட சொல்லவில்லை, முன்னேறிய மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டி உள்ளது. நெல்லை வந்த பயிற்சி ஐஏஎஸ் குழு கண்டு அதிர்ச்சி அடைந்தது. அதன் அடிப்படையிலேயே 2019 ஆம் ஆண்டு தலைமைச் செயலாளரால் வண்ணக் கயிறுகள் கட்ட தடை விதித்து அறிக்கையை வெளியிடப்பட்டது. கையில் வண்ண கயிறு கட்டக் கூடாது என அறிக்கை விட்டது ஸ்டாலின் அரசு அல்ல எடப்பாடி தலைமையிலான அரசு. கயிறு தொடர்பான அறிக்கை வெளியான நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த சுற்றறிக்கை மீது எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்காமலே இருந்தது.  இந்த அறிக்கை ஒரு கருத்துப் போர். ஆபத்தில் முதலுதவி தான் இந்த அறிக்கை, அறுவை சிகிச்சை அதனை செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. அந்த  அறிவை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget