மேலும் அறிய
Advertisement
பெண்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
இந்த தொகையை பெண்கள் தங்கள் விருப்பப்படி பயனுள்ள வகையில் செலவு செய்ய முடியும். தங்கள் கையிலும் பணம் இருக்கும் போது பெண்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுததாக 17 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2,39,582 பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விடுபட்ட 17,343 பேர் கூடுதலாக இத்திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி பேசும்போது, இந்த தொகை பெண்களுக்கான உதவித் தொகை அல்ல. உரிமைத் தொகை. அவர்களது உழைப்புக்கான மரியாதை. இந்த தொகையை பெண்கள் தங்கள் விருப்பப்படி பயனுள்ள வகையில் செலவு செய்ய முடியும். தங்கள் கையிலும் பணம் இருக்கும் போது பெண்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். எனவே, இந்த பணத்தை உங்களை மேம்படுத்த பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்றார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, இந்த திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் உதவி தொகை கிடைக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, பெண்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, பெண்களின் வாழ்வாதாரம் உயர உன்னதமான இந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion