திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜை செய்த அமைச்சர் சக்கரபாணி - படம் பிடிக்காத வகையில் பேட்டரி காரில் விடுதி சென்ற அமைச்சர்
ஆடிப்பெருக்கு தினத்தில் பரிகார ஸ்தலத்தில் பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார பூஜை செய்துவிட்டு செய்தியாளர்கள் படம் பிடிக்காதவாறு கோவில் பேட்டரி வாகனத்தில் தனியார் விடுதிக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தநிலையில், ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
கோவிலில் மூலவர் , சண்முகர், வள்ளி தெய்வானை அம்பாள், பெருமாள், விநாயகர் , மற்றும் தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்த அவர் மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி பூஜை நடத்தி வழிபாடு நடத்தினார். ஆடிப்பெருக்கு தினத்தில் பரிகார ஸ்தலத்தில் பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் திமுக அமைச்சர்கள் மீது தொடச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சத்ருசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்தநிலையில் அமைச்சர் சக்கரபாணி கோவிலில் இரகசியமாக சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவதாக தகவலறிந்து படம் பிடிக்கச்சென்ற செய்தியாளர்களை தவிர்த்து மாற்றுப்பாதையில் வெளியேறிய அமைச்சர் சக்கரபாணி, கோவில் பேட்டரி வாகனத்திலேயே விதிமுறைகளை மீறி தனியார் விடுதிக்கு சென்று அங்கிருந்த காரில் ஏறி அவசரமாக புறப்பட்டுச்சென்றார்.
அப்போது படம் பிடித்த செய்தியாளர்களை அமைச்சருடன் வந்தவர்கள் தடுத்து படம் பிடிக்காதவாறு பார்த்துக்கொண்டனர். ஆடிப்பெருக்கு தினத்தில் அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக பொது செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்