மேலும் அறிய
Advertisement
40 ஆண்டுகால எதிர்காலத்திற்காக 400 ஆண்டுகால எதிர்காலத்தை வீணாக்குவதா? - சுப. உதயகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை நாங்கள் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க கேட்டுக் கொண்டோம். அவரும் அப்படியே செய்வதாக உறுதியளித்தார் என்றார் உதயகுமார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ஐந்தாவது ஆறாவது அணுஉலைகளுக்கு முதலாவது கான்கிரீட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது அடுத்த ஆறு வருடங்களில் இரண்டு அணு உலைகளும் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் இந்த நிலையில் அணுக்கழிவு மையம் அணு உலை பூங்கா அமைப்பதற்கு அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 40 ஆண்டு கால எதிர்காலத்திற்காக 400 ஆண்டுகால சந்ததிகளை பலி கொடுக்க வேண்டுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில்தலா ஆயிரம் மெகாவாட் திறனுடைய இரண்டு அணு உலைகள் கடந்த 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகள் முதல் செயல்பட்டு வருகிறது. முதலாவது அணு உலை 2014ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி செய்துவரும் நிலையில் இரண்டாவது அணு உலையில் 2016 ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இந்த இரண்டு அணு உலைகளில் இருந்து தலா 562 மெகாவாட் கிடைக்கிறது. தற்போது முதலாவது அணு உலை எரிபொருள் நிரப்பும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது இரண்டாவது அணு உலையில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மூன்றாவது நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கியது 39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது.
இதனிடையே அணுமின் நிலைய வளாகத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைக்கும் பணிக்கான அடித்தளத்தில் முதலாவது கான்கிரீட் அமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. 49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் இந்திய- ரஷ்ய கூட்டு தொழில் நுட்பத்தில் இந்த அணி உலைகள் அமைகிறது. 2016ம் ஆண்டு 5வது அணு உலையையும் 2017-ஆம் ஆண்டு 6-வது அணு உலையும் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
ஆயிரம் மெகாவாட் திறனுடைய 2 அணு உலைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதன் மூலம் தமிழகத்திற்கு ஆயிரத்து 124 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மேலும் 4 அணு உலைகள் அமைவதால் கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் சி, மற்றும் D பிரிவில் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உள்ளது.
இதனிடையே தொடர்ச்சியாக அணு உலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகள் பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் இரண்டரை ஆண்டுகள் கூடங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை அவர்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுவட்டார கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஓரளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியாக அணுஉலை அமைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு மூன்றாவது நான்காவது நிலைகள் 21ஆம் ஆண்டு ஐந்தாவது ஆறாவது அலுவலர்கள் என எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதோடு அணுகழிவு மையம் அமைக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் தலைமையிலான எதிர்ப்புக் குழுவினர், ”முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு நன்றி தெரிவித்தோம். கூடங்குளத்தில் 5-6 அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்துத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். ஆவண செய்வதாக முதல்வர் உறுதி அளித்ததாக கூறும் இவர், ”தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை நாங்கள் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க கேட்டுக் கொண்டோம். அவரும் அப்படியேச் செய்வதாக உறுதியளித்தார். அதோடு கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான அப்பாவுவை நேரில் சந்தித்து புதிய அணு உலைகள் அமைவதை தடுக்க வலியுறுத்தி மனு அளித்தேன்” என தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஏ.பி.பி நாடு சுப.உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அணு உலைகள் அமைப்பதன் மூலம் 40 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் அணுக்கழிவுகளை அகற்ற போராட வேண்டியிருக்கும் 40 ஆண்டு கால எதிர்காலத்திற்காக 400 ஆண்டு கால எதிர்காலத்தை வீணாக்கும் செயல் இது. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல பராமரிப்பு பணிகள் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடக்க வேண்டுமானால் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலையில் பலமுறை நடக்கிறது. இரண்டாவது அணு உலை கடந்த மே மாதம் மட்டும் மூன்று முறை கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த அணு உலைகள் தரமற்றவை, பாதுகாப்பற்றவை. அதோடு அணு கழிவுகளை இங்கேயே புதைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அணுசக்தி துறை முயற்சிக்கிறது" என்றார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion