மேலும் அறிய
வேண்டும் வேண்டும் மணப்பெண் வேண்டும்.. பஸ் ஸ்டாப்பில் வாலிபர்கள்..பாராட்டிய மக்கள்
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன பிரசாரம்.
![வேண்டும் வேண்டும் மணப்பெண் வேண்டும்.. பஸ் ஸ்டாப்பில் வாலிபர்கள்..பாராட்டிய மக்கள் kanyakumari: Two youngsters demanded bride for marriage in Nagercoil bustand TNN வேண்டும் வேண்டும் மணப்பெண் வேண்டும்.. பஸ் ஸ்டாப்பில் வாலிபர்கள்..பாராட்டிய மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/15/d3e77ebb50d042dbada4882e8a324b571663216351975102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜெனிஷ் மற்றும் சுமிஷ்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஷ் (வயது 25), சுமிஷ் (25). பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணமகன்கள் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நூதன முறையில் ஜெனிஷ், சுமிஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பதாகை அணிந்திருந்தனர்.
![வேண்டும் வேண்டும் மணப்பெண் வேண்டும்.. பஸ் ஸ்டாப்பில் வாலிபர்கள்..பாராட்டிய மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/15/76628b7ebe2e2956850aca9877524bc91663216605548102_original.jpg)
அதில், மணப்பெண் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் பஸ் நிலையத்தில் இருந்த வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும், பணத்தை விட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் தெரிவித்தனர். இவர்களது நூதன விழிப்புணர்வு பிரசாரம் பஸ் நிலையத்தில் இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion