Thirparappu Falls: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி
கடந்த 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா மையமாக இருக்கும் கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது திற்பரப்பு அருவி(Thirparappu Falls) தான், மேற்கு மலைத் தொடர்ச்சியில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கே அருவியாக கொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமில்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.
காவலர்கள் 1,353 பேருக்கு சொந்த ஊர்களுக்கு பணியிட மாறுதல் - டிஜிபி சைலேந்திரபாபு
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது அந்த வகையில் கடந்த சில மாதங்களில் ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது, இருப்பினும் குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வந்தது இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வேறு பல பகுதிகளில் தங்கள் பொழுதைக் கழித்த நிலையில் திற்பரப்பு அருவியில் குளிக்க முடியாமல் இருந்தது.
நீதிபதிகள் எல்லாம் பாஜகவை சேர்ந்தவர்கள் என சொல்வது தவறு - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை - அனுமதி எப்படி வழங்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி
அதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த வியாபாரிகளும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகினர் , அருவியின் மேல் பகுதியில் தடுப்பணையில் குளிப்பதும் உல்லாச படகு பயணம் செய்வதில் ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மேலும் பல விதிமுறைகளை தளர்த்தியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளித்துள்ளார்.
பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது - காமராஜ்
இதனால் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆர்வத்துடன் குளித்து ,குதூகலத்துடன் சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுவது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - 5 லட்சம் இழப்பீடு தர மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு