மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை; பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி - மதுரை இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்திற்கு தேவையான நில ஆர்ஜித பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை.
கன்னியாகுமரி - மதுரை இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்திற்கு தேவையான நில ஆர்ஜித பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் ரயில் நிலையம் ஆய்வுக்கு பின் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள டவுன் ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பதிலாக டவுன் ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும் என்பதால் பணிகள் வேகமாக நடக்கின்றன. இந்த நிலையில் டவுன் ரயில் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகள், நிலைய மேலாளர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதை துரிதப்படுத்தவும், இடையூறுகள் இருப்பின் உடனடியாக களைந்து பணிகளை விரைந்து முடிக்கவும் ரயில்வே அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் ஆங்காங்கே முடியாமல் உள்ளது. எங்கெல்லாம் பணிகள் முடியாமல் இருக்கிறதோ அந்த பணிகளை விரைந்து முடிக்க மறு டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் எல்லாம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதோ அவற்றையெல்லாம் உடனடியாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை ரயில் பாதை பணிகள் கடந்த காலத்தில் மெதுவாக நடந்தது. ஆனால் தற்போது பவ்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இனி காலதாமதம் ஆகாது. குமரி மாவட்டத்தை மதுரை கோட்டத்துடன் இணைப்பது தொடர்பாக தெளிவாக கருத்து தெரிவிக்க முடியாது. கடந்த காலங்களில் குமரி மாவட்டத்துக்கு ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து செல்லும் ரயில்கள் பல இடங்களுக்கு சுற்றி செல்லும் நிலை இருந்து வந்தது. தற்போது குமரி மாவட்டத்தில் ரயில்வே திட்டங்கள் அதிகளவில் கிடைக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. எனவே பணிகளுக்கு நிலம் கண்டிப்பாக தேவை என்றால் மட்டுமே எடுப்பதை கொள்கையாக வைத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion