2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை
27 வயதான விஜிக்கு 2 வயதான பிரியா, மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தை உள்ளது
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலாவில் உள்ள ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜி (27), குழந்தைகள் 2 வயதான பிரியா, மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தையும் உண்டு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தெரிந்து கொள்ளவும்:- உணவுத்தட்டுப்பாடு உள்ள நாடுகளில் இந்தியா 103 ஆவது இடத்தில் உள்ளது - தொழில் ஆராய்ச்சி கவுன்சில் செயலர் சேகர் சி முண்டே
இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு நேற்று வீட்டுக்கு வந்த போது வீட்டருகே உள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது அவரது மருமகள் விஜி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டதையடுத்து அப்பகுதியினர் அங்கு வந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தெரிந்து கொள்ளவும்:- உப்பிலியப்பன் கோயிலில் தை திருவோணம் நட்சத்திரத்தையொட்டி அகோராத்ர புஷ்கரணி தெப்போற்சவம்
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை டிஎஸ்பி கணேசன் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியாத நிலையில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தெரிந்து கொள்ளவும்:- Urban Local Body Election: காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவிற்கு எதிராக களமிறங்கும் விசிக
வாழ்க்கையில் கவலைகளும் , துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும் அவர்களை தற்காலிகம் ஆக்குவதும் நிரந்தரம் ஆக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும் மாநில உதவி மையம் 104, சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தெரிந்து கொள்ளவும்:- கோவை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் வார்டு பங்கீட்டில் இழுபறி ; மற்ற கட்சிகளுடன் சுமூக உடன்பாடு..!