மேலும் அறிய

சனாதனத்தை உலகறியச் செய்யவேண்டும்.. அக்னிபத் புரட்சிகரமானது.. எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் பேச்சு..

நாட்டின் வளர்ச்சியில் அக்னிபத் திட்டம் முக்கிய பங்காற்றும் 2047 ஆம் ஆண்டில் இந்த திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சி. 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்லூரி முன்பு இருந்த சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த வஉசியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தொழில்முனைவோர்கள், சிறந்த கல்வியாளர், சிறந்த சைவ சித்தாந்தவாதி, சிறந்த விவசாயி, சிறந்த சுதேசி ஏற்றுமதியாளர் என எட்டு பேருக்கு வ.உ.சி விருதுகளை அவர் வழங்கினார்.

சனாதனத்தை உலகறியச் செய்யவேண்டும்.. அக்னிபத் புரட்சிகரமானது.. எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் பேச்சு..

பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தேசம் சுபிட்சம் அடையாமல் நாம் சுபிட்சம் அடைய முடியாது. அதற்காகப் பாடுபட்ட நம்முடைய தேசத் தலைவர்களை நாம் கண்டிப்பாக நினைவுகூற வேண்டும். இது நம்முடைய கடமையாகும். தேசத்தலைவர்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவைகளை தலைமுறை தலைமுறையாக நாம் கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறை நம்முடைய தேசத்தலைவர்கள் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை தேசத்திற்கு ஆற்றிய கடமைகளை நினைவுகொள்ள வேண்டும். இங்கே அமர்ந்திருக்கக் கூடியவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாம் இப்போது அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

சனாதனத்தை உலகறியச் செய்யவேண்டும்.. அக்னிபத் புரட்சிகரமானது.. எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் பேச்சு..

இந்த தேசம் எழுச்சி பெற்று வருகிறது. நாடு தன்னுடைய சுய பலத்தை தற்போது உணர்ந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பெரும் தொற்று காலத்தில் இந்தியா தன்னுடைய தேவையான பணிகளை மட்டும் செய்யாமல் உலகில் கொடுத்தது கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. இன்று நாம் சந்திக்கக் கூடிய முக்கியமான பிரச்னையை  பருவநிலை மாற்றம், நாட்டில் உள்ள பழங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு 400 கோடியாக இருந்த இளம் தொழில் முனைவோர்கள் தற்போது 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சனாதனத்தை உலகறியச் செய்யவேண்டும்.. அக்னிபத் புரட்சிகரமானது.. எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் பேச்சு..

’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கில் வளர்ச்சி நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்கள் நடவடிக்கைகள் சிலரால் தவறாக கொண்டுசெல்லப்படுகிறது. இளைஞர்களுக்காக வெளிப்படைத்தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

சனாதனத்தை உலகறியச் செய்யவேண்டும்.. அக்னிபத் புரட்சிகரமானது.. எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் பேச்சு..

இந்தத் திட்டத்தில் நான்கு வருடம் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு சிறுவன் இளைஞன் ஆக உருவாக்கப்படும். நாட்டுப்பற்று உருவாகும். இளைஞர்களிடம் தன்னம்பிக்கை, நல்ல ஒழுக்கம் உருவாகும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞன் உயர்வார் என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்ற வருத்தத்தை அவர் தெரிவித்தார். இந்த நாட்டின் வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் 2047 ஆம் ஆண்டில் இந்த திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். எனவே அக்னிபத் திட்டம் குறித்து புரிதல் அனைவருக்கும் அவசியம் என்று கூறினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget