மேலும் அறிய

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை.. ஏமாற்றத்துடன் செல்பி எடுத்து செல்லும் மக்கள்.!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. இந்த சூழலில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தடுப்பு தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்ததால் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை வெள்ளப்பெருக்கு தகர்த்தி தூக்கி வீசியது. மேலும் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. இந்த சூழலில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல  உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி கரையோரம் நின்று செல்பி எடுத்து சென்று வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து வரப்பட்ட குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியும் காத்திருக்கின்றனர். 

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை.. ஏமாற்றத்துடன் செல்பி எடுத்து செல்லும் மக்கள்.!

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 5 அணைக்கட்டுகள் உள்ளது. அதில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் தற்போது 60.50 அடி நீர் இருப்பும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 59.50 அடி நீர் இருப்பும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையில் 50.82 அடி நீர் இருப்பும், 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 29.87 அடி நீர் இருப்பும், 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 111.25 அடி நீர் இருப்பும் உள்ளது.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழலில் விரைவில் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதோடு அணைப்பகுதியில் மழை அளவை பொறுத்தவரை கடனாவில் 7 மிமீ, ராமநதியில் 88.2 மிமீ, கருப்பா நதியில் 30மிமீ, குண்டாறு அணையில் 28.2 மிமீ, அடவி நயினார் அணையில் 3மிமீ என உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்குடியில் 46மிமீ, செங்கோட்டையில் 60.8 மிமீ, தென்காசியில் 23மிமீ, சங்கரன்கோவிலில் 9 மிமீ, சிவகிரியில் 27 மிமீ என உள்ளது.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget