மேலும் அறிய

நெல்லை - குமரி மீனவர்கள் இடையே மோதல்; நாட்டு வெடிகுண்டு வீச்சு

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஐந்து விசைப்படகுகள் இழுவலைகள் மூலம் நெல்லை இடிந்தகரை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் வலை விரித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிலர்  கடலுக்குள் சென்று அவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் கடற்கரையை ஒட்டி மீன் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் செல்லாமல் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சுமார் 12 வள்ளங்களில் சென்று அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.  மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து தங்கள் பகுதிக்கு திரும்பி சென்று உள்ளனர். இதுகுறித்து சின்ன முட்டம் பகுதியைச் சார்ந்த விசைப்படகு ஓட்டுநர் கிறிஸ்டி என்பவர் கடலோர பாதுகாப்பு குழும  காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் இடிந்தகரையைச் சார்ந்த ஜெனிஃபர், வளன், ராயப்பன், சைல்ஸ் ஆனந்த், சிபி, பீட்டர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால் அவ்வப்போது விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதோடு அவர்கள் விரித்திருக்கும் வலைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தி செல்வதாக கூறி இரு மாவட்ட மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget