(Source: ECI/ABP News/ABP Majha)
World Elephant Day: அகஸ்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு..
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில், மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்,. அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அகஸ்திய மலையில் 1,197 சதுர கி.மீ பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது யானைகள் காப்பகம்
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.
- நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது),
- நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது), ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது),
- ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)
என 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில், தற்போது அகத்தியமலையும் யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்
உலக யானைகள் தினம்
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு தகவல்களும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சிறைபிடிப்பது, தவறாக நடத்துவது போன்ற செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று தான் முதன் முதலில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தை தளமாகக் கொண்ட யானை மறு அறிமுகம் அறக்கட்டளை, கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் பாட்ரிசியா சிம்ஸுடன் இணைந்து சர்வதேச யானைகள் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நாளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், சிம்ஸ் உலக யானைகள் தினத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க: Crime: ”என்னை நிர்வாணப்படுத்தி நகை போட்டு அழகு பாப்பாரு...” : ஃபைனான்சியர் சேகர் பற்றி மாடல் ஸ்வாதி அதிர்ச்சி தகவல்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்