மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
”தூத்துக்குடி மாவட்டத்தில் கலால் துறை உதவி ஆணையராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது”
![மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை Anti-corruption raid on the homes of the Regional Manager of the Madurai Civil Supplies Department மதுரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/917e9191593c88c0b34e30ec50f77bd1_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மதுரை மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறர் . இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தின் கலால்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 50 லட்சத்திற்கும் மேல் சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்ததது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்தில் காவல்துறை, மருத்துவத்துறையின் கூட்டுச்சதி உள்ளது - மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் சுதா தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் வீட்டில் அவர் இல்லாத நிலையிலும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில் வீட்டில் இருந்து பல ஆவணங்களையும் கைப்பற்றி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கொலை வழக்கு போட்டாங்க” - அரசு வேலை தட்டிப் போவதாக மாடுபிடி வீரர் வேதனை
இது போன்று மதுரையில் அவர் தங்கியுள்ள வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் 2020 டிசம்பரில் திருச்செந்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் மற்றும் அலுவலக உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கலால் பிரிவு உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அலுவலக உதவியாளர் அந்தோணிராஜ் ஆகிய இருவரும், ஸ்ரீநகர் டாஸ்மாக் கடையில் லஞ்சம் பெற்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)