மேலும் அறிய
Advertisement
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் - பயணிகள் வைத்த கோரிக்கைகள்
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் - கூடுதல் வசதிகள் செய்து தர பயணிகள் கோரிக்கை
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இது உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையிடம் நாகர் கோவில் ஆகும். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவி கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் ஆகியோர் வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. கோட்டார் பகுதியில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையமும், பள்ளி விளை பகுதியில் நாகர் கோவில் டவுண் ரெயில் நிலையமும் உள்ளன. பள்ளி விளை பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் மிகவும் முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது
இந்த நிலையத்தில் ஒரு பிளாட்பாரம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு பிளாட்பாரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரெயில் நிலையம் வழியாக ஏராளமான எக்ஸ்பிரஸ், மற்றும் பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் 18 ரெயில்கள் தற்போது நின்று செல்கின்றன. இந்த ரெயில் நிலையத்தை வடசேரி, வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள். வியாபாரிகள், பொதுமக்கள். நோயாளிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் கொல்லத்திலிருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து என்ஜின் மறுபக்கம் மாற்றப்பட்டு பின்னர் திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னை நோக்கி செல்லும். அதே போல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர் கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து என்ஜின் மறுபக்கம் மாற்றப்பட்டு பின் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக கொல்லத்திற்கு சென்றடைகிறது. இதனால் காலவிரயம் ஏற்படுகிறது என்று பயணிகள் புகார் கூறினர். மேலும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர் கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே வருகிற 20-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தி கொல்லத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் கூடுதல் பயணிகள் டவுண் ரெயில் நிலையத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. டவுண் ரெயில் நிலையத்தில் 4 ரெயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் 2 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளது. புதிதாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல் வதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். தற்போது பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கு, முன்பதிவு செய்வதற்கு, தக்கல் பதிவு செய்வதற்கு என ஒரு கவுண்டர் மட்டுமே உள்ளது. மேலும் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். பயணிகள் மழை மற்றும் வெயில் காலங் களில் அதிலிருந்து தப்பிப்ப தற்கு வசதியாக பிளாட் பாரங்களில் ஆங்காங்கே மேற்கூரை போடப்பட் டுள்ளது. அதனை முழுமை யாக அமைக்க வேண்டும்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகிறது. ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ரெயில் நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்துவதை தவிர்ப்பதற்காக குமரி மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் டவுண் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கென ரெயில்வே போலீசார் நியமிக்கப்படவில்லை. இது பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆதலால் பயணிகள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இங்கு நிரந்தரமாக பணிபுரிய ரெயில்வே போலீசார் நியமிக்க வேண்டும். மேலும் அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதோடு பயணிகள் டவுண் ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion