மேலும் அறிய

தூத்துக்குடி- இலங்கை, தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நட வடிக்கை

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு ஏற்கெனவே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் அந்த சேவை சில மாதங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி 2 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் துறை முக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இந்த நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறை, தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம் - தூத்துக்குடி-கன்னியாகுமரி ஆகிய கப்பல் சேவை தொடங்குவதற்காக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வஉசி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பையில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கடல்சார் உச்சிமாநாட்டில் புரிந்துணரவு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இதுகுறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, "தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற் கான ஒப்பந்தம் கையெழுத்தாகிள்ளது. 300 பயணிகள் செல்லும் வகையிலான கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. சில மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் தூத்துக் குடி வந்து சேரும். உடனடியாக தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நட வடிக்கை எடுக்கப் படவுள்ளது’’ என்றனர்.

தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கியது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தில் வைத்து அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றி சென்றது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்று இருந்தது. தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும் ஆரவாரத்திற்கு இடையே துவக்கப்பட்ட இந்த கப்பல் சேவை ஆனாலும் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் நின்று போனது தற்போதும் கூட நாகை மற்றும் காங்கேசன் துறைமுகம் இடையே இயக்கப்பட்ட கப்பலும் தனது பயணத்தை நிறுத்தி கொண்டது.

தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இலங்கை மற்றும் மாலத்தீவிற்கு இடையே இயக்கப்படுவதற்காக லிட்டோரல் குரூஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. ரூ 1200 கோடி திட்டமதிப்பீட்டில் துவக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் தூத்துக்குடி- இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிரந்தரமாக இயக்கப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலாப்பிரியர்கள். அதிக கட்டணம் , பல்வேறு கெடுபிடிகள் போன்றவையும் பயணிகள் விரும்பாத காரணம் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget