சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண கடல்சார் முன்கள ஆய்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது என்ன?
கொற்கையில் ஏற்கனவே அகழாய்வு மேற்கொண்டதில் கங்கை சமவெளிக்கு இங்கிருந்து வாணிபம் நடந்துள்ளது, ரோம் நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொற்கையில் இருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது.
தொல்லியல் துறை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கு கடல்சார் முன்கள ஆய்வு பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் துவங்கின.
தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் சாகர் தாரா ஆய்வுக்கப்பல் கடலில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பணிகளை தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடன் கூறும்போது, தமிழக அரசின் தொல்லியல் துறை தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.கொற்கையில் சங்க காலத்தில் இருந்த துறைமுகப்பட்டினத்தில் முன்கள ஆய்வுகளை செய்வதற்கு இப்போது தேசிய கடலியல் நிறுவனம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு தமிழக தொல்லியல் துறையும் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக கப்பலும் இங்கு வந்து உள்ளது.
1968-ல் இருந்து கொற்கையில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் ஆய்வில் பழைய கொற்கை துறைமுகம் எங்கே இருக்கிறது என்பதையும் கண்டறியும் வகையில் இருக்கும்.தற்போது கொற்கை, கடலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமிரபரணியில் இருந்து வடக்கு 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.ஆனால் பண்டைய நிலவியல் அமைப்புபடி கொற்கை எந்த இடத்தில் அமைந்திருக்க வேண்டும். கடலின் பகுதி எங்கே இருக்க வேண்டும். அதன் கட்டமைப்புகள் ஏதேனும் இருக்கிறதா?, அந்த காலத்தில் துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் இருந்து சிதைந்த மரக்கலன்கள் கிடக்கிறதா? என்பதை ஆய்வுகள் படி கண்டெடுப்பதன் மூலமாக இங்கே உள்ள பழைய துறைமுகங்கள், பண்பாட்டு நாகரிக சின்னங்களாக அமைக்க முடியும்.
இந்த பணியானது முதல் ஒரு வாரம் தூத்துக்குடிக்கும், திருச்செந்தூருக்கும் இடையேயான கடல் பகுதியில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதில் கிடைக்கக்கூடிய தகவல்களை கொண்டு அடுத்ததாக விரிவாக ஆய்வுகள் செய்யப்படும். ஆய்வில் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் இடத்தில் கூடுதலாக கவனம் செலுத்தப்படும்.இவ்வாய்வில் கொற்கை துறைமுகத்தின் தொன்மையை கண்டறிய Multibeam Echo sounding, Sidescan Sonar and Subbottom Profiler போன்ற அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தப்படுகிறது.கொற்கையில் ஏற்கனவே அகழாய்வு மேற்கொண்டதில் கங்கை சமவெளிக்கு இங்கிருந்து வாணிபம் நடந்துள்ளது, ரோம் நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொற்கையில் இருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 கி.மீ கடல் பகுதியில் இந்த முன்கள அகழ்வாராய்ச்சி என்பது நடைபெறும் தொடர்ந்து இந்த அகழ்வாய்வு கிடைக்கக்கூடிய ஆவணங்களைக் கொண்டு அடுத்த கட்ட அகழ்வாய்வு பணி என்பது நடைபெறும் என தெரிவித்தார். மேலும் கொற்கையில் ஏற்கனவே அகழாய்வு மேற்கொண்டதில் கங்கை சமவெளிக்கு இங்கிருந்து வாணிபம் நடந்துள்ளது, ரோம் நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொற்கையில் இருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது. கி.மு 8ம் நூற்றாண்டிற்கு முன்னர் கொற்கை வாணிபம் நடந்துள்ளது.
கொற்கை துறைமுகம் அமைந்துள்ள இடத்தை கண்டறிய இந்த ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வின் மூலம் கொற்கை நாகரீகத்தை வெளிகொண்டுவர இந்த ஆய்வு உதவும் எனவும், பொருநை அருங்காட்சியகம் நிலம் கண்டறியப்பட்டுள்ளது, விரைவில் அதற்கான பணிகள் துவங்கும். கொற்கை துறைமுகத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கடல்சார் ஆய்வு பணி தற்போது முதற்கட்ட முன்கள ஆய்வு பணி துவக்கி உள்ளோம் என தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்