மேலும் அறிய

கன்னியாகுமரி : கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. குழந்தைகளை காப்பது எப்படி?

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - குழந்தை திருமணம் செய்து வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக குழந்தை திருமணம் என்பது அதிகரித்து வருகிறது குறிப்பாக படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பிறக்கு அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது, கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச்சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது. அதுசட்டப்படி குற்றம் ஆகும். 
 
இந்தச் சட்டத்தின்படி குழந்தை திருமணம் செய்யும் மணமகன், குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்து பவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள், அர்ச்சகர், பெண் குழந்தைக்கு பொறுப்பாக உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், அனுமதி அளித்தவர்கள், பங்கேற்றவர்கள் மற்றும் தடுக்க தவறியவர்கள் அனைவரும் குற்றவாளி ஆவார்கள்.  

கன்னியாகுமரி : கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. குழந்தைகளை காப்பது எப்படி?
எனவே இதுபோன்ற குற்றம் புரிந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் பற்றி அறிந்தால் 1098 (அல்லது ) 181 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். எந்த இடத்தில் இருந்தும் குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும்  தகவல் அளித்தவரின் விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை, கிராம நிர்வாக அதிகாரி, கல்வித்துறை ஆகியோருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு மனமாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணம் புரியும் பெண்களுக்கு கர்ப்பப்பை முழுவளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவும், எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடனும் குழந்தை பிறக்க நேரிடுகிறது. 

கன்னியாகுமரி : கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. குழந்தைகளை காப்பது எப்படி?
இதனால் தாயும், சேயும் பிரசவத்தின்போது அல்லது பின்னர் மரணம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. குடும்பத்தை சரிவர பராமரிக்க இயலாதநிலை, கல்வியறிவுத் தடை, தன்னம்பிக்கை குறைதல், தற்கொலை எண்ணம், இளம் வயதிலேயே விதவையாதல், குடும்பத்தினரால் புறம் தள்ளப்படும் நிலை மற்றும் ஆதரவற்று துன்புறும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.   எனவே இத்திருமணங்களை தடுக்கும் முயற்சி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடமையாகும். குழந்தை திருமண தடுப்புச்சட்ட விதிகள்படி மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக உள்ளார். 

கன்னியாகுமரி : கடந்த 2 மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. குழந்தைகளை காப்பது எப்படி?
எனவே மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டடம் கீழ்தளம், நாகர்கோவில், குமரி மாவட்டம் தொலைபேசி எண்-04652-278404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குழந்தை திருமணம் செய்து வைத்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget