Tirunelveli: நெல்லையில் குவிந்த புகார்கள்.. இணையதளம் மூலம் 2 கோடி ரூபாய் மோசடி.. நடந்தது என்ன..?
நெல்லை மாநகரில் கைபேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரில் ரூபாய் 12 லட்சத்தி நான்காயிரம் மதிப்பிலான 64 கைப்பேசிகள் மீட்கப்பட்டது.
நெல்லை மாநகர பகுதிகளில் தொடர் வழிப்பறி, செல்போன் பறிப்பு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக மாநகர போலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் திருடு போன செல்போன்களும் புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்டு இருந்தது. குறிப்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் காணாமல் போன கைபேசிகள் மீட்கப்பட்டு காவல் துணை ஆணையர்கள் சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோர் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறிப்பாக மாநகரில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரிகளில் 12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 64 கைபேசிகளை மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதே போன்று இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும் கேஒய்சி புதுப்பித்தல் என ஓடிபி பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் பெறப்பட்டு உள்ளது, இந்த புகார்களின் அடிப்படையில் மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு சுமார் 4 லட்சத்து 80 ஆயிரத்து 929 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போல் இணையதள மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 31 புகார்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 319 ரூபாயை மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கை முடக்கி உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தவிர மாநகர காவல் நிலையங்கள் மூலமாக 11 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 60 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம். மேலும் தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் புகார்களை பெற குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்