மேலும் அறிய

2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒண்டிவீரன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களால் மறைக்கப்பட்டாலும் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒண்டிவீரன் ஒரு சமூதாயத்தை சார்ந்தவர் அல்ல இந்தியாவிற்கே சொந்தகாரர்

75வது சுதந்திர தின அமுதபெருவிழவின் ஒரு நிகழ்வாக அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தபால் துறை மூலம் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின்  251வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் ஒண்டிவீரனுக்கு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒண்டிவீரன் தபால் தலையை வெளியிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக் கொண்டு முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி மற்றும் ஒண்டிவீரன் வாரிசு ஒண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைந்தார். 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுதந்திர போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டி கவுரவித்தவர், அருந்ததியர் சமுதாய வளர்ச்சிக்காக மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட பிரச்சனையின்போது சட்டப்போராட்டம் நடத்தி அதனை மீட்டுத் தந்தவர் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார்.
     
தொடர்ந்து தபால் தலை வெளியீட்டு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், பிரதமரின் பெருமுயற்சியால் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு தபால் தலை வெளியிடபட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில் அறிந்திடாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கொண்டாடி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு பிறகு அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கி அழகு சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி. 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைவரது முயற்சியாலும் தேசத்தை முன்னேற்றுவோம்  என தெரிவித்தார்.

2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனை தொடர்ந்து பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ் மண்ணை சேராத தமிழக ஆளுநர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரர் ஒண்டிவீரனது தபால் தலையை வெளியிடுவது நமக்கு கவுரவம்  மற்றும் பெருமை. பாளையக்காரர்களாக சட்டம் இயற்றியவர்களாக இருந்தவர்களை ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள் பாரதப் பிரதமர் தற்போது அவர்களை அரசாள வைத்துள்ளார். எல் முருகன் மத்திய அமைச்சராக  இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை ஒண்டி வீரனின் தியாகத்தால் இந்த மேடையில் அமர்ந்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாடிய நிலையில் மேலும் ஓர் ஆண்டு கொண்டாட பிரதமர் பணித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனியாக நின்று  வெள்ளையனை விரட்டியவர்  ஒண்டிவீரன் மகத்தான வீரர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்றால் அதற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சரித்திரத்தை தேடி படித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். காசியில் ஒவ்வொரு மண்ணிலும் சிவலிங்கம் செறிந்திருப்பதை போன்று நெல்லையில் ஒவ்வொரு மண்ணிலும் வீரம் செறிந்திருக்கிறது என பேசினார்.

2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, மண்ணின் மைந்தன் ஒண்டிவீரன் தபால் துறை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வது பெருமையாக நினைக்கிறேன். தென்பகுதிக்கு வரும் போதெல்லாம் என்னிடம் பணிவு ஏற்படுகிறது. ஏனெனில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களைக் கொண்டது இந்த மண். ஆண்களும், பெண்களும் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் தாங்கியும் எழுத்துக்கள் மூலமும் பிரச்சாரம் செய்தனர். வேலூர் புரட்சி 1806-யை படித்தபோது மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெல்லையை சேர்ந்தவராகவும் இருந்தார்கள். ஆங்கிலேய அரசு வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. நமது வரலாறு வெளியே தெரியாத முறையில் இருந்தது. பிரிட்டிஷ் அரசு வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரின் வரலாற்றை  மக்கள் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. இன்னும் அவர்கள் இசை, நாட்டுப்புற கலைகள் வழியாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒண்டிவீரன் ஒரு சமுதாயத்திற்கான சொந்தக்காரர் அல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இந்தியாவிற்கும் அவர் சொந்தக்காரர். தற்போது பாரத பிரதமர் எடுத்துள்ள முயற்சி மூலம் அறியப்படாத வீரர்கள் வெளிக்கொண்டுவரும் முயற்சி நடந்து வருகிறது. 1857ல் , சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மகாத்மா காந்தி வந்த பின்பு சுதந்திரப் போர் தொடங்கியதாக சொல்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் கால் வைத்த நாள் முதலே சுதந்திர போர் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றை வரக்கூடிய சந்ததியினரிடம் நாம் பதிவு செய்ய வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை சிதைத்து தவறான வரலாறுகளை சித்தரித்துள்ளனர்.

சென்னை மாகாணமாக இருந்த போது  வில்லியம் பெண்டிங் என்பவர் நடத்திய ஆய்வில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை, பட்டியல் இனத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். இந்தியா எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் இருந்ததாக நமக்கு இதன் மூலம் தெரிகிறது. ஆங்கிலேய அரசின் மூலம் இந்தியா பாகுபாடு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியா வெவ்வேறு ராஜாக்களின் ஆளுமைக்குள் இருந்தாலும் ஒரே தேசமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் அதனை பிளவு படுத்தி நிலத்தைப் பிரித்தனர். புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். 2047இல் இந்தியா வளர்ந்த மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும். அந்த இலக்கை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி சுகாதாரம் ஆகியவை வளர்த்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் உயர்கல்வி கல்வி சதவீதம் அதிகம். அகில இந்திய அளவில் 28 சதவீதம் வரை தான் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. தமிழகத்தில் 50 சதவீதம்  உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை உள்ளது. இதில் பட்டியலின மக்கள் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 12- 16% மட்டுமே உள்ளது. நாம்  ஒரு குடும்பமாக வளர வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget