திருச்செந்தூர் போறீங்களா... போக்குவரத்தில் மாற்றம் இருக்கு! இதை தெரிஞ்சிட்டு போங்க.. முழு விவரம்
முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மூன்று நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மூன்று நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குடமுழுக்கு:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உலகப்பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றுவிட உள்ளது.அன்றைய தினம், காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை புனிதமான குடமுழுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர், இதனால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படும் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு 07.07.2025ம் தேதி காலையில் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான 05.07.2025, 06.07.2025 மற்றும் 07.07.2025 ஆகிய மூன்று நாட்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. எனவே திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்லவும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு சரக்கு வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து அறிவிப்பு.@CMOTamilnadu@tnpoliceoffl@SouthZoneTNpol pic.twitter.com/2xMP38GjMu
— Thoothukudi District Police (@TUTICORINPOLICE) July 4, 2025
திருச்செந்தூர் வருபவர்களுக்கு:
மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும், கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை/சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்லவும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.






















