மேலும் அறிய

ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை

ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வானிப துறை வாய்மொழி அனுமதி வழங்கி உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்னநிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி வரை கடலில் கடினமான கால நிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை சுமூகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் தோணி போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி போக்குவரத்து தொடங்கி இருக்கிறது.

ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை

இதுகுறித்து கோஸ்டல் தோணி உரிமையாளர் சங்க செயலாளர் லசிங்டனிடம் கேட்டபோது, தூத்துக்குடியில் 25 தோணிகள் உள்ளன. இதில் 5 தோணிகள் இலங்கைக்கும், 5 தோணிகள் லட்சத்தீவு, மினிக்காய் தீவுகளுக்கும், 15 தோணிகள் மாலத்தீவுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தோணி போக்குவரத்து கடல் பருவகால நிலையை பொருத்து சில மாதங்கள் இயக்கப்படுவது இல்லை. வழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்கக்கூடிய தோணி போக்குவரத்து, ஒரு மாதம் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்குகிறது. தோணிகளில் சரக்குகள் ஏற்றும் பணி தொடங்கி உள்ளது. வியாழக்கிழமை (இன்று) தோணி இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு புறப்பட்டு செல்லும்.

ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை

மேலும் மாலத்தீவில் புதிய அரசு அமைந்த பிறகு தோணி போக்குவரத்தில் சிறிய தேக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாலி துறைமுகம் அதிகாரிகள் தூத்துக்குடி வந்து தோணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். தோணிக்கு சில சலுகைகள் அளிப்பதாக உறுதி அளித்து உள்ளனர். அதன்படி தோணியை துறைமுகத்தில் நிறுத்தும் போது, இழுவை படகு மூலம் இழுத்து சென்று நிறுத்துவார்கள். இதற்கு ஒரு முறை நிறுத்துவதற்கு ரூ.40 ஆயிரம் செலவாகும். அதனை ரத்து செய்து இருக்கிறார்கள். அதே போன்று தோணிக்கு தனியாக தளம் கேட்டு உள்ளோம். அதனையும் விரைவில் தருவார்கள் என்று நம்புகிறோம்.

இதே போன்று இலங்கைக்கும் சுமூகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வானிப துறை வாய்மொழி அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தோணி தொழில் ஆண்டு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Samantha Divorce Controversy : ‘’சமந்தாவை வைத்து டீல் !’’காங். அமைச்சர் சர்ச்சை பேச்சுBJP Cadre issue : ”மன்னிப்பு கேட்டுட்டு போ” பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை? சுற்றிவளைத்த மக்கள்Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE OCT 3: சென்னை மெரினா கடற்கரையில் நடக்க விமான சாகச நிகழ்ச்சி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Breaking News LIVE OCT 3: சென்னை மெரினா கடற்கரையில் நடக்க விமான சாகச நிகழ்ச்சி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Watch Video: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! 38 வயதில் முரட்டு சதம் அடித்த மார்ட்டின் கப்தில் - பேட்டிங்கை பாருங்க
Watch Video: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! 38 வயதில் முரட்டு சதம் அடித்த மார்ட்டின் கப்தில் - பேட்டிங்கை பாருங்க
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Embed widget