மேலும் அறிய

17 ஆண்டாக முறையாக தூர்வாரப்படாத 40 ஆயிரம் ஊரணிகள்- வீணாக கடலில் கலக்கும் மழை நீர்

வடகிழக்கு பருவ மழைக்கு முன் ஊராட்சிகளில் உள்ள வரத்துக் கால்வாய், குளம், குட்டை ஊரணிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதினேழு ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாத நாற்பதாயிரம் ஊரணிகள், கனமழை பெய்தும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 ஆண்டாக முறையாக தூர்வாரப்படாத 40 ஆயிரம் ஊரணிகள்- வீணாக கடலில் கலக்கும் மழை நீர்

தமிழகத்தில் சுமார் பன்னிரண்டு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து நான்கு ஊராட்சிகள் உள்ளன. இவ்வுராட்சிகளில் சுமார் 41,948 ஊரணிகள், குட்டைகள், பாசன கண்மாய்கள், குளங்கள், உள்ளன. தவிர தமிழகத்தில் 46ஆறுகள், 81 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் உள்ளன. தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை. சுமார் 40% மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்கின்றனர். கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டு தோறும் தமிழக அரசால் இயந்திரங்கள் மூலம் ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளான ஊரணிகள், குட்டைகள், வரத்துகள் அந்தந்த ஆண்டு நிதிநிலை மைக்கேற்ப தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டன.

17 ஆண்டாக முறையாக தூர்வாரப்படாத 40 ஆயிரம் ஊரணிகள்- வீணாக கடலில் கலக்கும் மழை நீர்
2007ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்ட்ட பிறகு நீர் வள ஆதாரத்துறையின் கட்டுபட்பாட்டில் உள்ள பாசன குளங்கள் தவிர்த்து பெரும்பாலான ஊராட்சி நீர் நிலைகள், ஊரணிகள், குட்டைகள் முழுவதும் தேசி ஊரக வேலை திட்டத்தில் மனித சக்திகள் மூலம் மூலம் தூர் வாரப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் ஒவ்வொரு ஊரணிக்கும் அதிக பட்சம் ரூ ஐந்து இலட்சம் வரை மனித சக்திகள் மூலம் தூர் வாரப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்ட்டு பதினேழு ஆண்டுகளில் ஊரணிகளில்ஒரு அடி ஆழம் கூட முறையாக தூர் வாரப்பட வில்லை. இதனால் ஆண்டுதோறும் நீர்நிலைகள் மண் மேடாகியும், புல்பூண்டு முளைத்தும், மனித உயிர்களுக்கு உலை வைக்கக் கூடிய சீமை வேலிகருவை மரங்கள் வனம் போல் முளைத்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழை வரலாறு காணாத வகையில் பெய்தும் மழை நீரை சேமிக்க முடியவில்லை. ஆண்டு தோறும் பல இலட்சம் செலவில் ஊரணிகள் மனித சக்திகள் மூலம் தூர்வார செலவு செய்வதை தவிர்த்து இயந்திரங்கள் மூலம் தூர் வாரினால் மட்டுமே மழை நீரை முறையாக சேமிக்க முடியும்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாருதல், வரத்துக்கால் தூர்வாருதல் பனியை இயந்திரங்கள் கொண்டு தூர் வாரும் வகையில் விதிமுறைகளை திருத்தம் செய்து வரக்கூடிய வடகிழக்கு பருவ மழைக்கு முன் ஊராட்சிகளில் உள்ள வரத்துக் கால்வாய், குளம், குட்டை ஊரணிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்

TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?

3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்

Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்

Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?

Chennai Power Shutdown: சென்னையில் கரண்ட் கட்: நாளை ( 01.02.2025) எங்கெல்லாம் தெரியுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?

Embed widget