மேலும் அறிய

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

வீணாய் போகும் தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா- கவனத்தில் கொள்ளுமா சுற்றுலாத்துறை.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக உள்ள மணப்பாடு, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

தூத்துக்குடியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் தருவைகுளம் சூழல்சார் சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுப்பட்டுள்ளது. கண்ணாடி இழை படகில் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்துச் சென்று கடல்வாழ் உயிரினங்களை நேரடியாகக் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது,அரசின் நிதி வருவாய்க்கு மற்ற அரசு துறைகளுக்கு இணையாக வசூல் ஈட்டித்தருவது சுற்றுலாத் துறை. சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின்போது நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்துவருகிறது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் வரிசையில் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம் கடற்கரை, கோடை காலத்திற்கு ஏற்ற இடமான ஊட்டி, கொடைக்கானல் எனப் பல உள்ளன. அதற்கு அடுத்ததாக ஆன்மிகத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களை பெற்றுள்ள மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

அரசின் நேரடி தலையீடின்றி முதல் பூங்கா வனத்துறை சார்பில் தேசிய அளவில் நடந்தப்பட்ட ஆய்வுப் பட்டியலில் சிறந்த சூழல் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்க சுற்றுலாத் தலமாக தருவைகுளம் கடற்கரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கடற்கரைப் பகுதியை அழகுப்படுத்துவதற்காக பாதாம், சவுக்கு, பிசின், ஊசியிலை மரங்கள் நடப்பட்டு பசுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்து சூழல் சுற்றுலா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் வளரும் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் புற்கள், கடற்குதிரை, கடல் விசிறி, கடல் பஞ்சு, கடல் பாசி, நட்சத்திரமீன்,கடல் அட்டை, சங்கு வகைகள் உள்பட பல்வேறு வகை உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில் படகின் அடித்தளத்தில் கண்ணாடி இழை பொருத்தப்பட்டு தருவைகுளம் கடற்கரையில் இருந்து காரசல்லி தீவு வரை கடல் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கடலுக்கு அடியில் snorkelling மற்றும் scuba diving மூலமாகவும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்ய 8681020780 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடற்கரையில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்விதமாக தருவைகுளம் கடற்கரை முழுவதும் நெகிழிப் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கவும் பட்டது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேரடியாக அரசின் தலையீடின்றி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமூக வளர்ச்சி கண்ணோட்டத்தோடு தருவைகுளம் சூழல்சார் பல்லுயிர் பெருக்க சுற்றுலா கடற்கரை பூங்கா செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தருவைகுளம் கடற்கரை முழுவதுமாக கிராம குழுவினர் மூலமாக நிர்வகிக்கப்படும். கடலுக்குள் சுற்றுலா செல்ல ஏற்பாடு தருவைகுளம் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

இந்தக் கடல் சுற்றுலா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து காசுவாரிதீவு வரை சுமார் 2 மணி நேரம் கடலுக்குள் நடுவே கண்ணாடி இழை படகில் சென்று கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் கண்டு ரசித்தனர். ஆரம்பத்தில் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் உணவகம், மரங்கள், மின் விளக்குகள் என அனைத்தும் இருந்தன. ஆனால் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் கண்ணாடி இழைப்படகின் தாழ்வாரபகுதி சேதமடைய படகு கரைக்கு ஏற்றப்பட்டது. கடலில் அமைக்கப்பட்ட படகுக்கு செல்லும் தளமும் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உள்ளது.மேலும் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் உள்ள கட்டிடங்கள், கழிவறைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தருவைகுளம் கடல்பகுதி நெகிழி இல்லாத பகுதியாக உதட்டளவில் அறிவிக்கப்பட்டதோ என நினைக்கும் அளவில் கடற்கரையில் நெகிழிகள் தேங்கி கிடக்கின்றன. கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகளும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

முடங்கி போன தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்கா; பராமரிப்பு இல்லாததால் உடைந்து போன கடல் சுற்றுலா படகுதளம்

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் பெரிதாக மலைப்பிரதேசங்கள் இல்லாத மாவட்டம். கடற்கரை சார்ந்த பகுதிகளே தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக உள்ளது குறிப்பாக மணப்பாடு,குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த அரசு முன் வர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget