சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்; நடவடிக்கை எடுக்காத வனத்துறை - விவசாயிகள் வேதனை
விவசாயி காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளத் தான் வேண்டும் விவசாயி வேதனை.
சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானை விரட்ட நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர். நான்காவது நாளாக விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அறுவடைக்கு தயாரான சோளப்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயி வேதனை அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக அவ்வப்போது அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பெரியாற்று பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் சுமார் இரண்டரை ஏக்கருக்கு மேல் சோளம் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இரவு ஆறுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த சோளப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயி காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளத் தான் வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் காட்டுயானைகளை விரட்ட வனத்துறை கவனம் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. மீண்டும் நான்காவது நாளாக விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த அதிகப்படி விளைந்த சோளப்பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தியுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயி என்று செய்வது அறியாமல் திகைத்து வருகிறார்..