மேலும் அறிய

ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்

இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்..இதற்கு எனது கடுமையான கண்டனங்கள்- தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி இருக்கும்.

ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்

இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்.. இதற்கு கடுமையான கண்டனத்தை ராகுல் காந்திக்கு தெரிவித்து கொள்கின்றேன்... பாராளுமன்றத்திற்கென்ற ஒரு  நடைமுறை இருக்கின்றது.. ஆனால் ராகுல் காந்தி படத்தை காண்பித்து வருகின்றார்.. மூன்று அமைச்சர்கள் எழுந்து இதற்கு பதில் சொன்னார்கள்.. ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக் கொண்டே இருந்தார்..அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள்.. இன்னுயிரை நாட்டிற்காக ஈன்றவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்று ராகுல் சொன்னார்.. உடனடியாக ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.. விவசாயிகளுக்கு பயிர்களுக்கு விலை நிர்ணயம் இல்லை என்று தவறான கருத்தை சொன்னார். அதற்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது..

பாராளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் பேசுகிறார்... தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 எம்பிக்கள் உள்ளனர்.. ராகுல் காந்தி இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசினாலும் 40 எம்பிக்கள் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தது வேதனை அளிக்க கூடியது.. இவர்களால்  தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது.. சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான், ஒரு வேதனையான நிலையை பாராளுமன்றத்தில் பார்த்து இருக்கின்றோம்.. இதனை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் மற்றும் பாரத பிரதமர் தயாராக இருப்பார்  என்பது எனது கருத்து,

ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்

அதே போன்று மதுவிலக்கு கொள்கை, தூத்துக்குடி எம்பி  கனிமொழி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மதுவிலக்கு பற்றி அவ்வளவு பேசினார்கள்.. இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதை கூட தவிர்த்து பயந்து போய் இருக்கின்றார். அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர் காவு வாங்கப்பட்டு இருக்கின்றது.முதல்வர் துறை சார்ந்த அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை.விசாரணை வேண்டும் என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள்.. தமிழக அரசாங்கமும் பயப்படுகின்றது.. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு, தமிழக எம்பிக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தான் மன வேதனை.அண்ணாமலை வெளிநாடு சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? கட்சி பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.. அது எல்லாமே அரசியல் ரீதியாக எடுக்கப்படும் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
Embed widget