மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை வேண்டும் - கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த புகார் மனு
பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரே தேர்தல் விதிமுறைகளின் படி தகுதி நீக்கம் செய்திடவும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்- அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர் அந்த மனுவில் , இந்திய பாராளுமன்ற தேர்தலின் போது இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் விதமாக குஜராத் மாநிலம் காந்தி நகரில் தேசிய பிரதமர் மோடியை கண்டித்தும் 15 மேற்பட்ட வேட்பாளர்களை மிரட்டல் விடுத்து வேட்புகளை வாபஸ் பெற செய்த அமித்ஷா ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரே தேர்தல் விதிமுறைகளின் படி தகுதி நீக்கம் செய்திடவும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டிய புரியும் அப்பகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் கர்நாடக மாநிலம் பாலியல் குற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரேவண்ணா உள்ளிட்ட பாலியல் குற்றவாளிகளை நூராபார்க் அடிப்படையில் தண்டனை வழங்கிட கோரியும். இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியல் சாதி சார்ந்த மக்களை வழிபாடு செய்ய விடாமல் வழிபாட்டு உரிமையை தடுக்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சில நடத்திய ஜாதி வெறி ஆட்டத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கிடவும் அவர்கள் வழிபாடு செய்ய உரிமையை மீட்க வேண்டும் ஜாதியை வெறியாட்டத்தை நடத்திய கும்பல் மீது குண்டர்தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை வலியுறுத்தியும், தலை விரித்தாலும் போதைப்பொருட்கள் நடமாடத்தை உடனடியாக ஒலித்திடவும் தமிழ்நாடு பெண் காவலர்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி வரும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.