மேலும் அறிய

சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க" - நயினார்

“எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” - அருணாசலத்தின் தாய் ஆதங்கம்

"விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்" என்று தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை சந்தித்தபின்  நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின்  பெற்றோரை பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு சென்ற இளைஞரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள், காலையிலிருந்து சென்ற மகன் திரும்பவில்லை என தேடி வந்துள்ளனர்.  காவல்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்து விட்டதாக போன் செய்துள்ளனர்.

காவலர் மீது நடவடிக்கை

விசாரணையின்போது, காவல்துறையினர் தாக்கியதில் அருணாசலம் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலும்  விசாரணையின்போது,  விசாரணை கைதியை கொன்றுள்ளனர். தாயிடம் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறை அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காவல்துறை அடித்து கொலை செய்துள்ளது. தொடர்புடைய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாச்சலத்தை கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 

சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர்

ஜனநாயகன் பார்ப்பதில் ஆர்வம்

விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர வாக்களித்த மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது இருந்த ஆட்சி மாற்றப்பட்டது தூக்கி எறியப்பட்டது. அதன் பிறகு சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் இளைஞர் கொல்லப்பட்டதால் அப்போதிருந்த ஆட்சியும் தூக்கி எறியப்பட்டது. இப்போது இந்த ஆட்சியில் ஆரம்பத்திலேயே காவல்துறை மரணங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை எலி கடித்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவமனை வசதிகள் உள்ளன” என்று கூறினார்.

பேட்டியின்போது நயினார் நாகேந்திரன் அருகில் நின்ற அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி, “எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என ஆதங்கத்துடன் கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி–நரசாபூர் சிறப்பு ரயில் இயக்கம்: செப்டம்பர் மாதம் 4 சேவைகள் – முழு விவரம் இதோ!
தூத்துக்குடி–நரசாபூர் சிறப்பு ரயில் இயக்கம்: செப்டம்பர் மாதம் 4 சேவைகள் – முழு விவரம் இதோ!
ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு
ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு
"விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget