மேலும் அறிய

ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

யூடியூபர் ஜி.பி.முத்து காவல் நிலையத்தில் புகாரளித்த ஊர் பொதுமக்கள்.

யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும் பெண்களை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி வருவதாகவும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். 

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் மேலும் பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார். 

இவருக்கும் அந்தப் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் பட்டறை அம்மன் கோயில் கட்டுவதற்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அப்பகுதி மக்கள் கோயில் கட்டும் பணியை தொடங்கினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மாந்திரீக வேலை செய்வதாக ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது. 

 

 

இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு இரண்டு வேனில் வந்தனர். காவல் நிலையத்தில் ஜி.பி. முத்து மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரில், சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக ஜி.பி. முத்து கோயிலில் நடந்த சிறப்பு பூஜையை மாந்திரீக பூஜை நடப்பதாக வீடியோ வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி அந்த வீடியோவை வைரலாகியதாகவும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில பெண்களைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டதாகவும் மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் பணிகள் கட்டப்பட்டு வருவதை பொதுப் பாதையில் கட்டப்படுவதாக கூறி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வந்ததாகவும், ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு
ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு
"விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர்
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க" - நயினார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget