மேலும் அறிய

"வந்தோம்.. வேட்டியை மடித்து கட்டினோம்., நிவாரண பணிகளை செய்தோம்" என சென்றுவிடுகிறார்கள்- அண்ணாமலை கடும் தாக்கு

காலம் காலமாக எம்.பி., எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள் மழை நீரை  வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை.

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மில்லர்புரம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடியை பொறுத்தவரை மழை முடிந்து மூன்று நாட்களாகியும், ஊரும் வீடுகளும் தண்ணீரில் தான் உள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் அகற்றப்படாததால், நிவாரண முகாம்களில் அதிகப்படியான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளமீட்பு பணிகளில் தமிழக அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, மூன்றுநாட்கள் கழித்து இன்றுதான் மீட்கப்பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது, இந்த ஆட்சி எவ்வளவு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சென்னையில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றதும், மூன்றாவது நாள் மக்கள் சாலைக்கு வந்துவிட்டனர். ஆனால், தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். திருச்செந்தூர் பகுதி இதைவிட இன்னும் மோசமாக உள்ளது. நிவாரண பணிகளை தாமதப்படுத்தினால் மக்களுடைய கோபத்திற்கு நாம் அனைவரும் இரையாகி விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தூத்துக்குடியை பொறுத்தவரை மழைவெள்ளத்தை வெளியேற்றுவதற்கான திட்டம் இல்லை. 80மீட்டராக இருந்த பக்கிள் ஓடை அகலத்தை 20 மீட்டராக குறுக்கி தற்போது கால்வாயாக உள்ளது.

காலம் காலமாக எம்.பி., எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள் மழை நீரை  வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் வெள்ளம் வந்தால் மட்டும், இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் வந்தோம்.. வேட்டியை மடித்து கட்டினோம்... நிவாரண பணிகளை செய்தோம் என சென்றுவிடுகிறார்கள். தூத்துக்குடியை மழைவெள்ள பாதிப்பில் இருந்து மீட்பதற்கு முழுமையான திட்டம் இல்லை. தொலைநோக்கு  பார்வையில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பணத்தை முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை. எனவே தூத்துக்குடியை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுவரை மழைநீர் வடிகால் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக கணக்கிட வேண்டும்‌‌. தொலைத்தொடர்பு இல்லாத கிராமங்களில் இன்னமும் மீட்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே ஜனநாயக நபர்கள் மீது மக்கள் கோபப்படுவது நியாயமானது. களத்தில் இறங்கி வேலைசெய்ய வேண்டாம் தி.மு.க. அமைச்சர்கள், மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்கு பயந்து   கார் கண்ணாடியை இறக்காமலேயே செல்கிறார்கள். தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருவெள்ளம் வருகிறதென்றால், இங்கு வெள்ள எச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவரவில்லை என்றுதான் அர்த்தம்.

நகர்புறத்தில் எந்த அளவு பாதிப்பு இருக்கிறதோ அதைப்போல கிராமப்புறங்களிலும் பாதிப்பு இருக்கிறது. விவசாயம் பயிர்கள் எல்லாம் வரலாறுகாணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. நிவாரண உதவிகளை பொதுமக்கள் உயர்த்தி கேட்பது நியாயமானது. சேதத்தை முழுமையாக கணக்கீடு செய்து அவர்களுக்கான நிதி உதவிகளை செய்ய வேண்டும். வெள்ளத்தால் இறந்துபோன ஆடு, கோழி முதல் முழுமையாக அனைத்தையும் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். சேத மதிப்பு விவரங்களை கணக்கீடு செய்வதற்கு கிராம நிர்வாக அதிகாரி முதல் அரசு அதிகாரிகள் அனைவரும் களத்திற்கு வர வேண்டும்" என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget