மேலும் அறிய

பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி

’’உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை இந்த ஆண்டே வெளியிட உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை’’

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீசன் முடிவுக்கு வந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இந்த உப்பளங்களை நம்பி சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. இங்கு  ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்கள் தான் உப்பு உற்பத்தி மிக அதிகமாக நடைபெறும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவுக்கு வரும்.
 
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குறித்த காலத்தில் உப்பு உற்பத்தி தொடங்கவில்லை. மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கியது.அது போல மே மாதத்தில் 2 வாரங்கள் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 15 நாட்களுக்கு மேலாக உப்பு உற்பத்தி நடைபெறவில்லை.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் என்பதால் இந்த காலத்தில் உப்பு உற்பத்தி நடைபெறாது. இதையடுத்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டும், தென்னங் கீற்றுகளாலும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
இது குறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. பெரிய அளவிலான உப்பளங்களில் 65 சதவீதம் அளவுக்கு தான் உற்பத்தி நடந்துள்ளது. சில சிறிய உப்பளங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 17 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகி உள்ளது. இதில் இதுவரை 50 சதவீத உப்பு விற்பனையாகி விட்டது. 50 சதவீத உப்பு கையிருப்பில் உள்ளது. இது வரும் ஜனவரி மாதம் கடைசி வரை போதுமானதாக இருக்கும். இந்த ஆண்டு உப்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. தற்போது ஒரு டன் உப்பு 2700 ரூபாய் வரை விலை போகிறது. உப்பு உற்பத்தி குறைந்தாலும் விலை ஓரளவுக்கு நன்றாக இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏதும் இல்லை என்றனர்.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
உப்பள தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மழை காலத்தில் வேலை இல்லாததால் பெரிதும் வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனர், தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து இருப்பது தொழிலாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது, இருந்த போதிலும் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இந்தாண்டே உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உப்பள தொழிலாளர்கள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget