மேலும் அறிய

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!

’’ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து பருத்து சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 8,700 ரூபாய்க்கு விற்பனை’’

டெல்டா மாவட்டங்களில் பிரதான சாகுபடி நெல் சாகுபடி ஆகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர் போதிய அளவு வராத காரணத்தினால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. மேலும் நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக பணப் பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கிய ஆலோசனையின்படி பணப் பயிரான பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரின் அளவைவிட குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால் மூன்று அறுவடை செய்து  விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை விற்பனை செய்து வருவது வழக்கம்.
 
அதனையொட்டி இந்த ஆண்டு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை தற்போது அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8700 ரூபாய் வரை அதிகபட்சமாக விலை போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை 15 வாரங்கள் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் மேல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில்முருகன் தெரிவித்தார்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
 
பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி விலை பிரச்சினை காரணமாக தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். ஆகையால் விவசாயிகள் தாங்கள் செய்த செலவு பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி நல்ல முறையில் விளைச்சல் கண்டுள்ளது. அதேநேரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதிக விலைக்கு விற்பனையாகி வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆண்டுதோறும் இதேபோன்று பருத்திக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையும் என தெரிவித்தனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget