மேலும் அறிய

கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்

குலமங்கலத்தில் சுமார் 85 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக மதுரைவீரன் சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றோம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோவிலுக்கு அனைத்து மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில், கோவில் பாதை மற்றும் சுற்றுப்புற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்

85 குடும்பங்களின் வழிபாட்டுக்கு சிக்கல்

அந்த வகையில் ஒரத்தநாடு வட்டம் குலமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குலமங்கலத்தில் சுமார் 85 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக மதுரைவீரன் சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றோம். பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வரும் இந்த கோவிலுக்கு செல்லும் பாதை, கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கோவிலுக்கு சென்று வழிபடுவதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலரை மட்டும் கோவிலுக்குள் அனுமதிப்பதாகவும், மற்றவர்களை கோவிலுக்கு செல்ல ஆக்கிரமிப்பாளர்கள் தடுப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு தன்னிச்சையாக சிலர் தங்களது பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி, கோவில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இடங்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிடாவெட்டு பூஜை, அன்னதானத்துக்கும் வழிவகை

மதுரைவீரன் சுவாமி கோவிலில் வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய பூஜைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கிடாவெட்டு பூஜை நடத்தி, அதன் பின்னர் அன்னதானம் வழங்கும் பாரம்பரிய வழிபாட்டு முறையை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் நிலம் மற்றும் அதற்கான பாதை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனைத்து சமூகத்தினரும் எந்தவித தடையுமின்றி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக பட்டாவுக்கு காத்திருப்பு

இதேபோல், ஒரத்தநாடு தாலுகா கரைமீண்டார்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு இடத்துக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கரைமீண்டார்கோட்டையில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு தமிழக அரசால் கடந்த 2006-ம் ஆண்டு குடியிருப்பு பயன்பாட்டுக்காக இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அதற்கான பட்டாவை வழங்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், நீண்ட காலமாகியும் தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள அவர்கள், குடியிருக்கும் இடத்துக்கு உரிய பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பட்டா வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால், முதற்கட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மனுவில் எச்சரித்துள்ளனர்.

நெல் ஆலையில் இருந்து வெளியேறும் தூசி

தஞ்சாவூரை அடுத்த வல்லம் வடக்குத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மற்றொரு மனுவில், தனியார் நவீன அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் தூசியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நவீன அரிசி ஆலையில் சுமார் 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் உலர்த்தும் எந்திரத்தில் இருந்து அதிகளவில் தூசி வெளியேறுவதாகவும், காற்றில் கலந்து சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூசி படிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் தூசியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மனுதாரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குலமங்கலம் கோவில் வழிபாட்டு உரிமை, கரைமீண்டார்கோட்டை பட்டா பிரச்சினை, வல்லம் அரிசி ஆலையின் தூசி மாசு என வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
கோவிலுக்குள் செல்லும் பாதை எங்கே? ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்: கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget