போராட்ட ஆயத்த மாநாட்டில் திரளாக பங்கேற்போம்... ஓய்வூதியர்கள் தீர்மானம்
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மேற்கு வட்ட மாதாந்திர கூட்டம் வட்ட தலைவர் ராஜன் தலைமையில் சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சை சிந்தாமணி பகுதியில் நடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மேற்கு வட்ட மாதாந்திர கூட்டத்தில் வரும் 20-ம்தேதி திருச்சியில் நடக்கும் போராட்ட ஆயத்த மாநாட்டில் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மேற்கு வட்ட மாதாந்திர கூட்டம் வட்ட தலைவர் ராஜன் தலைமையில் சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைச் செயலாளர் குருமூர்த்தி இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமானுஜம் வரவேற்புரையாற்றினார் . வட்ட செயலாளர் மருதமுத்து செயல் அறிக்கை வாசித்தார் . வட்ட பொருளாளர் கண்ணன் வரவு,செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இதில் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் , வட்ட துணைத் தலைவர் சிவசாமி, மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட தலைவர் கருப்புசாமி நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேமா நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில -மாவட்ட மையத்தின் அறிவிப்பின் படி ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி திருச்சியில் நடைபெறும் போராட்ட ஆயத்த மாநாட்டிலும், அடுத்த மாதம் 23-ந்தேதி ( டிசம்பர்) மாவட்ட தலைநகரில் நடைபெறும் கருப்பு சின்னம் அணிந்து செய்யும் ஆர்ப்பாட்டத்திலும் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















