வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடுக்காக ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி வலியுறுத்துவோம் - வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி வலியுறுத்துவோம் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி வலியுறுத்துவோம் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா அருள்மொழி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் சுடுகாட்டுக்கு அருகில் கருமாதி மண்டபம் கட்டுவது தொடர்பாக ஊர் பொதுமக்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
தங்கள் சந்ததியினருக்கு சொந்தமான இடத்தில் கருமாதி மண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் சமீபத்தில் சமாதான கூட்டம் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அந்த இடத்தை வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"இந்த இடத்தில் எதிர்ப்பை மீறி கருமாதி மண்டபம் கட்டினால் அவற்றை வன்னியர்கள் ஒன்றிணைந்து இடிப்போம்" என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் தமிழக அரசு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒரு லட்சம் பேரை ஒன்று திரட்டி தங்களுக்கான இட ஒதுக்கீட்டை தரவேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் எனவும் கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்