மேலும் அறிய

கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!

கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பப் பிரிவில் 3 வகையான பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கால அளவில் கற்பிக்கப்படுகின்றன.

ஒரத்தநாடு: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கல்லூரிகளில், நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த படிப்புகளுக்கு எவ்வித நுழைவுத்தேர்வும் இன்றி, பிளஸ்-2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Cut-off) அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது.

குவியும் விண்ணப்பங்கள்: தற்போதைய நிலவரம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆண்டுதோறும் போட்டி அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரம்:

பிவிஎஸ்சி – ஏ.ஹெச் (BVSc & AH): 10,678 பேர்
பி.டெக் (B.Tech) படிப்புகள்: 5,356 பேர்
மொத்த விண்ணப்பங்கள்: 16,034 மாணவர்கள்

ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் (BVSc & AH)

தமிழகத்தில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (BVSc & AH) மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இப் படிப்புகள் கீழ்க்கண்ட 7 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன:

சென்னை
நாமக்கல்
திருநெல்வேலி
ஒரத்தநாடு
சேலம் (தலைவாசல்)
உடுமலைப்பேட்டை
தேனி (வீரபாண்டி)

இந்த மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) வழங்கப்படுகின்றன.

நான்கு ஆண்டுகள் கொண்ட பி.டெக். படிப்புகள் மற்றும் இடங்களின் விவரம்

கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பப் பிரிவில் 3 வகையான பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கால அளவில் கற்பிக்கப்படுகின்றன. அவற்றின் கல்லூரி வாரியான இடங்கள் இதோ:

கோடுவெளி கல்லூரி (திருவள்ளூர் மாவட்டம்):

உணவுத் தொழில்நுட்பம் (B.Tech Food Technology): 60 இடங்கள் (6 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு)

பால்வளத் தொழில்நுட்பம் (B.Tech Dairy Technology): 40 இடங்கள் (3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு)

மத்திகிரி கல்லூரி (ஓசூர்):

கோழியின தொழில்நுட்பம் (B.Tech Poultry Technology): 40 இடங்கள்
உணவுத் தொழில்நுட்பம் (B.Tech Food Technology): 40 இடங்கள்

தலைவாசல் இணைப்புக் கல்லூரி (சேலம்):

உணவுத் தொழில்நுட்பம் (B.Tech Food Technology): 40 இடங்கள்
பால்வளத் தொழில்நுட்பம் (B.Tech Dairy Technology): 40 இடங்கள்

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிப்பு!

முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைவதாக இருந்தது. சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்வதிலும், விண்ணப்பிப்பதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று, தற்போது ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கெடு நீட்டிப்பு இல்லை!

அதேநேரம், வெளிநாட்டினர் (Foreign Nationals), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), அவர்தம் வாரிசுகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதி ஆதரவு பெற்றவர்களுக்கான (NRI Sponsored) இட ஒதுக்கீட்டிற்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget