மேலும் அறிய

Rajaraja Chola : "நாங்கலெல்லாம் அப்பவே அப்படி" மாமன்னர் ராஜராஜன் கொண்டு வந்த சாவா மூவா பேராடுகள் திட்டம்..!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அற்புதமான திட்டத்தை ராஜராஜ சோழன் கொண்டு வந்தார் என்றால் ஆச்சரியம்தானே

தஞ்சாவூர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அற்புதமான திட்டத்தை ராஜராஜ சோழன் கொண்டு வந்தார் என்றால் ஆச்சரியம் அல்லவா? ஆனால் அதுதான் உண்மை. இப்போதைய அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களுக்கு முன்னோடி என்றால் அது ராஜராஜ சோழனின் சாவா மூவா பேராடுகள் திட்டம். இந்த திட்டத்திற்கு நுந்தா விளக்குகள்தான் அஸ்திவாரம். அது என்ன நுந்தா விளக்கு? சாவா மூவா பேராடுகள். தெரிந்து கொள்வோமா!!!

நுந்தா விளக்கால் ஏற்பட்ட திட்டம்

நுந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு, திருநுந்தா விளக்கு, நொந்தா விளக்கு, தூண்டாமணி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ, மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். சிறந்த ஆளுமை கொண்ட ராஜராஜ சோழன் தன் நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொண்டு வந்த நலத்திட்டம்தான் பற்றி பாருங்கள்.

முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிதான் சாவா மூவா பேராடுகள் திட்டம் உருவாக வழிவகுத்தது. தஞ்சை பெரிய கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் நுந்தா விளக்கு பற்றிய தகவல்கள் உள்ளன.

Rajaraja Chola :

செல்வ செழிப்பு பெண்மணியின் வேண்டுதல்

தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனக்கவலையில் வாடி, தன் பிரச்னை தீர்ந்தால் தஞ்சை பெரிய கோயிலில் நுந்தா விளக்கு ஏற்ற நிதி அளிக்கிறேன் என வேண்ட, வேண்டுதல் நிறைவே அந்த பெண் கோயிலை பராமரிக்கும் நிர்வாகியை சந்தித்து வேண்டுதலை கூறி பத்தாயிரம் பொற்காசுகள் கொடுத்துள்ளார். இந்த  தகவல் மாமன்னன் ராஜராஜ சோழன் கவனத்துக்குச் செல்கிறது. அந்தச் செல்வந்த பெண்மணியிடமிருந்து பொற்காசுகளைக் கோயில் சார்பில் ராஜராஜ சோழனே பெற்றுக்கொள்கிறார். அடுத்த நொடியே அமைச்சரை அழைத்து, ‘இந்த ஊரில் மிகவும் வறுமையில் வாடும் நபர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள்’ என்று கட்டளையிடுகிறார். பறந்த சேவகர்கள் அந்த ஊரில் வறுமையில் வாடிய ஒருவரை அரசர் முன் கொண்டு வந்து நிறுத்த பொற்காசுகள் மூட்டையை ராஜராஜ சோழன் கொடுப்பார் என்று அனைவரும் நினைத்திருக்க, நடந்தது வேறொன்று.

விளக்கெரிய நெய் தேவை... வறுமை ஒழிய வந்த திட்டம்

கோயில் நிர்வாகியை அழைத்த மாமன்னர் ராஜராஜசோழன், ‘‘தினமும் உண்ணாழிகையில் விளக்கெரிக்க, எவ்வளவு நெய் தேவை’’ என்று வினவ. ‘‘ஒரு ஆழாக்குத் தேவைப்படும்’’ என்றார் அவர். அடுத்து, கால்நடை வளர்ப்பில் அனுபவம் கொண்ட அமைச்சர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, ‘‘செல்வந்த பெண்மணி கொடுத்த கோயில் நிதியிலிருந்து வறுமையில் வாடும் அந்த மனிதருக்கு 96 ஆடுகளை வாங்கிக் கொடுங்கள். அதில் கிடா, பெட்டை, குட்டிகளும் இருக்க வேண்டும். இந்த ஆடுகளின் பால் மூலம் கிடைக்கும் நெய்யைத் தினமும் ஒரு ஆழாக்கு கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். இந்த 96 ஆடுகளின் எண்ணிக்கையும் சில ஆண்டுகளில் அதிகரித்து விடும்.

அதற்குள் இவர் வறுமை நீங்கி வளம் பெற்றுவிடுவார். இவர் மீண்டும் 96 ஆடுகளைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். அவற்றை மற்றொருவருக்கு வழங்குவோம். அந்த ஆடுகளைப் பெற்றுக் கொண்டவர் கோயிலுக்கு நெய் கொடுக்க வேண்டும். அவர் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தவுடன் வேறு ஒருவருக்கு, அடுத்து மற்றொருவருக்கு என இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் வறுமையில் வாடுபவர்களே இல்லாத நிலை உருவாகட்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு வறுமை ஒழிப்பு திட்டமாக ராஜராஜ சோழன் அறிவிக்க அனைவருக்கும் ஆச்சரியம்தான்.

சாவா மூவா பேராடுகள் திட்டம்

இதற்கு ஆதாரம் இருக்கா என்ற கேள்விகள் எழும். இவை எதுவும் ஆதாரம்  இல்லாமல் சொல்லப்பட்ட தகவல் அல்ல. சாவா மூவா பேராடுகள் குறித்து ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேராடுகள் திட்டம் போலவே, பெரும் பசுக்கள் திட்டமும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. ‘‘தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் என்னும் ராஜராஜேஸ்வரத்தை எழுப்பிய முதலாம் ராஜராஜசோழன் அக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான திருவிளக்குகள் எரிய ஆட்டுப் பண்ணைகளையும், பசுப் பண்ணைகளையும், எருமைப் பண்ணைகளையும் நிரந்தர முதலீடாகப் பல்வேறு ஊர்களில் அமைத்து பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வுக்கு வழி செய்ததோடு, அவ்விளக்குகள் எரிய தேவைப்படும் நெய்யை மட்டும் அப்பண்ணையைப் பராமரிப்பவர்கள் அளிக்க வகையும் செய்தார்.

எண்ணிக்கை குறையக்கூடாது என அதிகாரிகள் ஆய்வு

தான் அளித்த ஆவினங்களின் எண்ணிக்கை, அந்தப் பண்ணையில் என்றென்றும் குறையக் கூடாது. நோய் காரணமாகவோ, முதுமையின் காரணமாகவோ ஆடு அல்லது பசு இறந்து போகுமானால், அதற்குப் பதிலாக இன்னோர் ஆட்டையோ பசுவையோ பண்ணையைப் பராமரிப்பவர்கள் ஈடு செய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து அறிக்கையை அரசரிடம் வழங்குவர். அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணைகள் சந்திரன், சூரியன் உள்ளளவும் அழியாமல் செயல்பட வேண்டும் என்பதே ராஜராஜசோழனின் நோக்கம்.

கல்வெட்டு செய்தியிலும் ஆதாரம்

இதற்காக அளிக்கப்பட்ட ஆடுகளையும், பசுக்களையும் சாவா மூவா பேராடுகள் என்றும், சாவா மூவா பெரும் பசுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தஞ்சைக் கோயிலில் அவர் வைத்த ஒரு விளக்குக்காகப் பலன் தரும் 48 பசுக்களைச் சிறுகுளத்தூரில் இருந்த புளியன் சூற்றி என்பவரிடம் ஒப்படைத்தான் என்று தஞ்சைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ராஜராஜ சோழன் மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் சாவா மூவா பேராடுகள் பெரும் பசுக்கள் திட்டம் ராஜேந்திர சோழன் காலத்தில் அவர் ஆட்சிப் பகுதி முழுக்கச் செயல்படுத்தப்பட்டன. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி வந்தபோதும், தஞ்சைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு மட்டும் நெய் வழங்க கால்நடைகள் வளர்க்கும் திட்டம் செயல்பட்டுள்ளது. மிகவும் சிறந்த முறையில் தொலை நோக்கு திட்டமாக இதை ராஜராஜசோழன் நிறைவேற்றியிருப்பது பெரும் ஆளுமைதானே!!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget