வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்தவர்கள் பேரணி!
கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்தவர்கள் பேரணி: நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இணைந்து பேரணியில் பங்கேற்பு.
![வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்தவர்கள் பேரணி! Velankani Christmas Celebrations More than 100 chrismas santas participated in the Christmas parade வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்தவர்கள் பேரணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/a05599349feba2cc8acf3bdede50d83e1671536074798501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகை மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி விடியற்காலை வின்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலமாக வந்தனர். பேருந்து நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.
பேரணியை நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கண்டு களித்தனர். இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பங்கு மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கிறிஸ்மஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் கிறிஸ்மஸ் விழா வேளாங்கண்ணியில் களைகட்ட தொடங்கியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)