மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்ற வாகனங்கள் நாளை ஏலம்
பொது ஏலமானது, நாளை 26.12.2025 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் நாளை 26ம் தேதி பொது ஏலத்தில் விட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.
பொது ஏலமானது, நாளை 26.12.2025 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
வாகனங்கள் மேற்படி பழைய ஆயுதப்படை ஏலத்திற்குண்டான மைதானத்தில் நாளை 26.12.2025 அன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 26.12.2025 அன்று காலை 7 முதல் 10 மணி வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரு.5,000 முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் GST விற்பனை வரி 18 % ஆகியவற்றை சேர்த்து 26.12.2025 அன்று உடனே செலுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.





















