போக்குவரத்து நெரிசலை தடுக்க என்ன செய்யலாம்? பெரிய கோயில் பகுதியில் தஞ்சாவூர் எஸ்.பி. ஆய்வு
பெரிய கோயிலுக்கு எதிரே வாகன நிறுத்துமிடத்திலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு 40 அடி அகலத்துக்கு இடத்தைப் பெற்று புதிய சாலை அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.
இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.
கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் வலுவாக, ஆழமாக இருக்கவேண்டும்.
216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால் 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.
இத்தகைய பெருமைகள் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை நிலவுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண காவல் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் திட்டமிட்டு வருகின்றனர். பெரிய கோயில் சாலையை வாகன நிறுத்துமிடமாகவும், தற்போதுள்ள வாகன நிறுத்துமிடத்தைப் போக்குவரத்து பாதையாகவும் மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சாலையில் வாகன நிறுத்துமிடமாக மாற்றும்போது பக்தர்கள் எளிதாக கோயிலுக்குள் செல்வதற்கு வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம் என கருதுகின்றனர்.
இதேபோல, பெரிய கோயிலுக்கு எதிரே வாகன நிறுத்துமிடத்திலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு 40 அடி அகலத்துக்கு இடத்தைப் பெற்று புதிய சாலை அமைக்கவும், அச்சாலையின் வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது எனவும் அலுவலர்கள் கருதுகின்றனர்.
இந்த இரு திட்டங்களையும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஆய்வு செய்தார். அப்போது இத்திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் விளக்கிக் கூறினார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். அப்போது, தஞ்சாவூர் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





















