மேலும் அறிய

கிடுகிடுவென உச்சத்துக்கும் போகும்... சரசரவென்று பாதாளத்திற்கும் இறங்கும்: என்ன தெரியுங்களா?

தஞ்சைக்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சையில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் உற்சாகத்தோடு தக்காளியை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்‌. இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.


கிடுகிடுவென உச்சத்துக்கும் போகும்... சரசரவென்று பாதாளத்திற்கும் இறங்கும்: என்ன தெரியுங்களா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்தது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகம் வர தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை அதிகம் இருந்தால் தஞ்சை மார்க்கட்டுக்கு 1300 முதல் 1500 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

அதுவே தக்காளி விலை குறைவாக இருந்தால் சுமார் 4500 முதல் 5000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சைக்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யபட்டது. பொங்கல் நேரத்தில் சற்று விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையானது. ஆனால் தற்போது தக்காளி வரத்து அதிகரித்தள்ளதால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் ஒலி பெருக்கி மூலம் கடைக்காரர்கள் 5 கிலோ ரூ.100 என கூவி கூவி விற்பனை செய்து வருகிறனர்.

மேலும் சிலர் லோடு ஆட்டோக்கள் மூலமும் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் அரை கிலோ, கால் கிலோ என வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது விலை குறைந்து ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் 2 கிலோ 3 கிலோ என வாங்கி செல்கின்றனர்.

தக்காளி அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படும். சைவம் தொடங்கி அசைவம் என அனைத்து தரப்புக்கும் தக்காளி தான் முதன்மையாக இருக்கும். அதேபோல் உணவகங்களில் தக்காளி அதிகம் பயன்படுத்தப்படும். அதனால் தக்காளியிகன் தேவை அதிகம். மழை பெய்தால் தக்காளி விலை உச்சத்தை தொடும். தற்போது தக்காளி வரத்து அதிகம் உள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது. பொங்கலுக்கு முன்னாடி விலை உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் குறைவாகவே வாங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?
பெரும்பாண்டி பகுதியில் புதிய டாஸ்மாக்: கூடவே கூடாது எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ள பொதுமக்கள்
பெரும்பாண்டி பகுதியில் புதிய டாஸ்மாக்: கூடவே கூடாது எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ள பொதுமக்கள்
டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
டிஸ்மிஸ் ஆனவர் பணி செய்ததால் பரபரப்பு... தஞ்சை மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
அரசாணை எண் 187-ஐ திரும்பப் பெறுங்கள்... வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget