மேலும் அறிய
Advertisement
பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் - காலநீட்டிப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை
’’ஒரு ஏக்கருக்கு 488.25 ரூபாய் பிரீமியம் செலுத்தி காப்பீடு’’
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆகும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் இயற்கை சீற்றங்களால் எதிர்பாராமல் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை சந்திப்பதற்கு பயிர் காப்பீடு திட்டம் மிகுந்த உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 13 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் மத்திய மாநில அரசுகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை ரத்து செய்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து இருந்தனர். மேலும் சம்பா சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மழை நீர் சூழ்ந்த இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு 20,000 முதல் 30,000 வரை செலவு செய்து தற்பொழுது மழையால் பயிர்கள் பாதிப்படைந்தது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா தாளடி பருவங்களில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி பருவங்களில் சாகுபடி செய்யும் நெல்லினை பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் செலுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடைசி நாளான இன்று அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்தி வருகின்றனர். அதே போன்று ஒரு ஏக்கருக்கு 488.25 ரூபாய் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், சம்பா தாளடி நெல் பயிர்களுக்கான காப்பீடு செய்து வருகிறார்கள். மேலும் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் தொடர்ந்து தங்களது விளை நிலங்களை பாதுகாக்கக்கூடிய பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதாலும் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion