மேலும் அறிய

திருவாரூர்: அதிக மின்கட்டணம் குறித்த புகாரில் அலட்சியம்; மின் வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ராஜ்குமார் தனது வீட்டில் மின் கட்டணம் திடீரென உயர்ந்தது குறித்து மின்வாரிய ஊழியரிடம் வாய்மொழியாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: திடீரென அதிக மின்கட்டணம் வந்தது குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய மின்சார வாரியத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மனையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு மின் இணைப்பு பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சராசரியாக 400 யூனிட் இருந்த மின் அளவு கடந்த 20.05.2020 ஆம் தேதி 720 யூனிட் என கணக்கு எடுக்கப்பட்டிருந்தது என்றும் 2021ல் பயனீட்டு அளவானது 500 என குறைத்து காணப்பட்டு அதன் பின் 740 என்றும் அதன் பின் 840 என்றும் கட்சியாக 21.09.2022 ம் தேதி தேதியில் 770 யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ராஜ்குமார் தனது வீட்டில் மின் கட்டணம் திடீரென உயர்ந்தது குறித்து மின்வாரிய ஊழியரிடம் வாய்மொழியாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தெரிவித்துள்ளார் என்றும் ஆனால் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து கடந்த 03.10.2022 ஆம் தேதி அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளருக்கு பதிவு தபால் மூலம் புகார் அளித்தும் எவ்வித பதிலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருவாரூர்: அதிக மின்கட்டணம்  குறித்த புகாரில் அலட்சியம்; மின் வாரியத்துக்கு  ரூ.10 ஆயிரம்  அபராதம்
 
மேலும் ராஜ்குமார் வீட்டின் மின் அளவு 14074.5 என்று உள்ளது என்றும் ஆனால் கடந்த 21.09.2022 ம் தேதி மின்வாரிய பணியாளர் ராஜ்குமார் வீட்டிற்கு வந்து கணக்கீட்டு அட்டையில் எழுதிய ரீடிங் அளவு 15090 உள்ளது என்றும் அதற்கான மின் கட்டணம் தொகை 3901 என காட்டியுள்ளார் என்றும் இது குறித்து மின்மீட்டரில் தவறு உள்ளது என்று பலமுறை புகார் தெரிவித்தும் அதன் மேல் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 10.12.2017 ல் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
 
இந்த புகாரில் மின்வாரிய பணியாளர் மின் அளவு குறிக்க வரும்போதெல்லாம ராஜ்குமார் தன் வீட்டில் அதிக மின் அளவு பயன்படுத்தியதாக காட்டுகிறது என்று தெரியப்படுத்தியும் மின்சார வாரியத்தால் மீட்டரில் சரியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது சேவை குறைபாடு எனவும் மேலும் அவரது  வீட்டில் மின் மீட்டரில் கடந்த 21.09.2022ம் தேதி அவரது வீட்டுக்கு வந்து கணக்கீட்டு அட்டையில் மின் அளவு 15090 குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ராஜ்குமார் அவருடன் இருந்தும் அதில் குறிப்பிட்டுள்ள தொகையை அவர்  செலுத்தி உள்ளதால் அவரது மின் மீட்டர் அதன் பின்பு பழுதாகி இருக்கும் எனவும் கணக்கிட்டு பணியாளர் ராஜ்குமாரின் வாய்மொழியான புகார் குறித்து அவரது மேல் அதிகாரியிடம் தெரிவித்து இருந்தால் மின்னலவு குறித்து எந்த ஒரு தவறும் அல்லது மின்மீட்டரில் ஏற்பட்ட பிரச்சினை முன்கூட்டியே சரி செய்ய வாய்ப்புள்ளது எனவும் மின்கணக்கிலும் பணியாளர் செய்த தவறுக்கு  திருவாரூர் மாவட்ட துர்காலயா ரோடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அடியக்கமங்கலம் உதவி மின் பொறியாளர் மற்றும் ஆகியோர்களே பொறுப்பு என கூறி ராஜ்குமாருக்கு எதிர் தரப்பினர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளை நஷ்டத்திற்கு இழப்பீடாக 5000 ரூபாயை எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ தனித்தோ வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயை இந்த உத்தர பிறப்பித்த நாளில் இருந்து இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் வழங்க தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்று மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget