மேலும் அறிய

கார்த்திகை தீபம்: முத்துப்பேட்டையில் அகல்விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்பு

பருவமழையால் அகல் விளக்குகள் தயாரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையிலும் தற்போது வெயில் தலைகாட்டுவதால் விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்படைந்துள்ளது.

முத்துப்பேட்டை பகுதியில் திருக்கார்த்திகை தீபத்திருநாள்  கொண்டாட்டத்துக்கான அகல்விளக்குகள் தயாரிப்பு துரிதமாக நடந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டத்துக்கான அகல்விளக்குகள் தயாரிப்பு துரிதமாக நடந்து வருகிறது. தீபங்களில் தூபதீபம், புஷ்ப, நாத, புருஷ, மிருக, கஜ, ருயாஜத, வியாக்ர, ஹம்ச, கும்ப, குக்குட, விருஷ, கூர்ம, நட்சத்திர, மேரு, கற்பூர என 16 வகை தீபங்கள் உள்ளன. திருக்கார்த்திகை நாளன்று கோயில்களில் இந்த வகை தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெறும். வீடுகளில் 27 தீபம் ஏற்றி பூ, பழங்கள், அவல்பொரி ஆகியன வைத்து படைப்பது வழக்கம். தீபதிருநாளுக்காக அன்ன வடிவ, பிரபை குத்து விளக்கு, மலபார் விளக்கு, பஞ்சலிங்க தீபம், பாவை, பாலாடை விளக்கு, விநாயகர், லட்சுமி, பாலாஜி  விளக்குகள், சர விளக்குகள், தூண்டாமணி, வாசமாலை அகல் விளக்கு, டெரக்கோட்டா, குபேர விளக்கு, நந்தா, வித்யா தீபம், காமாட்சி, அஷ்டலட்சுமி, 108 அஷ்டோத்ர தீபம், அடுக்கு விளக்குகள் என பலரக தீபவிளக்குகள் தற்போது  விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு  கடற்கரை சாலைபகுதிகளில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் திருக்கார்த்திகை அகல்விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏரி, ஆறு, வயல் பகுதிகளில் வண்டல்மண் எடுத்து பக்குவபடுத்தி பெரிய, சிறிய அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர்.

கார்த்திகை தீபம்: முத்துப்பேட்டையில் அகல்விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்பு

பருவமழையால் அகல் விளக்குகள் தயாரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையிலும் தற்போது வெயில் தலைகாட்டுவதால் விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த காலங்களில் மண்பாண்டம் செய்ய வண்டல் மண் எடுக்கப்பட்டது தற்போது கெடுபிடி சட்டமுறை ஆகிவை வந்துவிட்டது அதனால் ஒருலோடு வண்டலை ரூ.1,500 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் மொத்த விலைக்கு ஆயிரம் சிறிய அகல் விளக்கு ரூ.1,000க்கு கொடுத்தோம் தேவைப்பட்டால் குறைத்தும் கொடுத்தோம் தற்போது இந்த ஆண்டில் மொத்த விலைக்கு ஆயிரத்துக்கு குறைந்தது கொடுக்க முடியாது கட்டுபடியாகாது. சிறிய விளக்கு சிலரை விலையில் 2 ரூபாய்க்கும், பெரிய விளக்கு 7, 8 ரூபாய்க்கும் கொடுக்கிறோம் தற்போது மானாமதுரையிலிருந்து வேறு ஒரு ரக விளக்குகள் இறக்குமதி செய்து இருக்கிறோம். நாங்கள் செய்த பொருட்களை அங்கு அனுப்புவோம் அங்கு செய்யப்படும் பொருட்கள் நாங்கள் வாங்கி வருவோம் இதில் அங்கிருந்து வரப்பட்ட 7விளக்குகள் உள்ள ஒரு அடுக்கு அகல் விளக்கு 150ரூபாயிக்கும், 12விளக்குகள் உள்ள இரண்டு அடுக்கு அகல் விளக்கு 350 ரூபாயிக்கும், 25 விளக்குகள் உள்ள மூன்று அடுக்கு அகல் விளக்கு 500ரூபாயிக்கும் விற்பனை செய்கிறோம். 

கார்த்திகை தீபம்: முத்துப்பேட்டையில் அகல்விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்பு

நாங்கள் தினமும் மண்பாண்ட பொருட்களை செய்து வருகிறோம் தற்போது திருக்கார்த்திகை தீபம் என்பதால் தற்போது இந்த அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இது முடிந்ததும் வரும் பொங்கலுக்கு பணிகள் விரைவில் துவங்க உள்ளது அப்பகுதியில் இந்த மண்பாண்ட தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளது அன்றாடும் இதில் பிழைப்பு நடத்தி வந்ததாலும் முன்பு போல பெரியளவில் ஒன்றும் கிடைப்பதில்லை தற்போது மண்பாண்ட உபயோகம் குறைந்துவிட்டதால் இந்த தொழில் நசிந்து வருகிறது. அடுத்த தலைமுறையில் இவையெல்லாம் அரிதாகிவிடும். மண்பாண்ட உபயோகம் ஆரோக்கியமானது என்ற நிலையிலும் மக்கள் ஏனோ உலோக பாத்திரங்களையே நாடுகின்றனர். அதேபோல அகல்களும் பித்தளை, இரும்பு, எவர்சில்வர் உலோகத்தில் தயாரித்து விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனாலும், மண்பாண்ட தயாரிப்புகளை விரும்பி தேடி வருவோருக்காக இவற்றை தயாரித்து குறைந்த லாபம்  வைத்து விற்கிறோம் என்கின்றனர் தொழிலாளர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Embed widget