மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : மூடப்பட்ட அரிசி ஆலை: அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வதாக விவசாயிகள் வேதனை..!
ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே அரவை பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
திருவாரூரில் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நவீன அரிசி ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இருந்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக நெல் உற்பத்தி நடைபெறுவதால் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்த வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள் அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாராகிறது.
இந்த அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமாக திருவாரூர் மற்றும் சுந்தரகோட்டை ஆகிய 2 இடங்களில் நவீன அரிசி ஆலை இயங்கி வந்தது. இதில் திருவாரூர் நவீன அரிசி ஆலை நாள் ஒன்றுக்கு 100 மெ.டன் அரிசி உற்பத்தி திறன் கொண்டது. இந்த அரிசி ஆலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நவீனமாக்கப்பட்ட அரிசி ஆலையாக மாற்றப்பட்டு, இயற்கை எரிவாயு மூலம் செயல்படுத்தும் வகையில் புதிதாக கட்டுமான வசதிகளும் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலே மீண்டும் அரவை பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மில்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி அரிசி மூட்டைகள் தயாராகிறது. இந்த சூழ்நிலையில் விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரில் உள்ள நவீன அரிசி ஆலை கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடக்கிறது. இதனால் இங்கு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் நவீனமயமாக்கப்பட்ட அரிசி ஆலையில் எந்திரங்கள பயன்பாடு இன்றி சிதைந்து வருகிறது. மேலும் கட்டுமானங்கள் பாராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது.
எனவே நாள்தோறும் சுமார் 100 டன் அளவில் அரவை திறன் கொண்ட அரசு நவீன அரிசி ஆலை பழுதுகளை நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion